செய்திகள்

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Published On 2017-08-16 06:04 GMT   |   Update On 2017-08-16 06:04 GMT
நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று நளினி சிதம்பரம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.
புதுடெல்லி:

தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கான அவசர சட்டத்துக்கான வரைவு மசோதாவை மத்திய அரசிடம் தமிழக அரசு கொடுத்துள்ளது. வரைவு மசோதாவுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அவசர சட்டம் உடனடியாக வெளியிடப்படும்.

நீட்தேர்வில் இருந்து விலக்கு கிடைத்தப்பிறகு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் நாளை முதல் கலந்தாய்வை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த முடிவு நீட்தேர்வுக்கு ஆதரவான மாணவர்கள், பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இது தொடர்பாக வழக்கு தொடரவும் முடிவு செய்தனர்.


இந்த நிலையில் நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று நளினி சிதம்பரம் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பின்பற்றி நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை விரைவில் நடத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை அவசரமாக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
Tags:    

Similar News