செய்திகள்

ஹபீஸ் சையது மீது நடவடிக்கை வேண்டும் - ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மதகுருக்கள் ஐ.நா.வுக்கு வலியுறுத்தல்

Published On 2017-08-10 04:52 GMT   |   Update On 2017-08-10 04:52 GMT
மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சையது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா சபையை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மதகுருக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
மும்பை:

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையது பாகிஸ்தானில் தற்போது சுதந்திரமாக வசித்து வருகிறார். ஹபீஸ் சையதை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா பலமுறை வற்புறுத்தியும் பாகிஸ்தான் அரசு அவரை பாதுகாத்து வருகின்றது.

பாகிஸ்தானில் ஹபீஸ் சையது தற்போது புதிதாக அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஹபீஸ் சையது மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மும்பையைச் சேர்ந்த இஸ்லாமிய பாதுகாப்பு அமைப்பின் சார்பில் ஆயிரக்கணக்கான மதகுருக்கள் ஐ.நா சபையை வலியுறுத்தி தீர்மானம்
நிறைவேற்றியுள்ளனர்.

இந்த தீர்மானம் ஐ.நா சபையின் எல்லை தாண்டிய தீவிரவாத தடுப்புப்பிரிவு மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் அப்துல் ரகுமான் அஞ்சாரியா தெரிவித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு இதே போல ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிற்கு எதிராக இதே அப்துல் ரகுமான் அஞ்சாரியா ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மதகுருக்கள் உடன் பத்வா பிறப்பித்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News