செய்திகள்

ஆதார் கட்டாயம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2017-06-27 07:10 GMT   |   Update On 2017-06-27 07:41 GMT
சமூகநல திட்டங்களுக்கு ஆதார் கட்டாயம் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
புதுடெல்லி:

மத்திய அரசு பல்வேறு சமூகநல திட்டங்களின் பலன்களை பெற ஆதார் எண் கட்டாயம் என உத்தரவிட்டு இருந்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும், அதில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சமூகநல திட்டங்களை பெற ஆதார் கட்டாயம் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்து விட்டனர்.


இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ஆதார் அட்டை இல்லாதவர்கள் ஆதார் பெறுவதற்கு ஜூன் 30-ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த அவகாசம் செப்டம்பர் 30-ந்தேதி வரை நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இடைக்கால தடை எதுவும் விதிக்காமல் வழக்கு விசாரணையை செப்டம்பர் 30-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News