செய்திகள்

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

Published On 2017-06-23 05:44 GMT   |   Update On 2017-06-23 05:44 GMT
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நாடுமுழுவதும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்தில் மாணவர்கள் தங்களது முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
புதுடெல்லி:

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவு மற்றும் தகுதி தேர்வான நீட் தேர்வு மே 7 ம் தேதி நாடு முழுவதும் நடந்தது. இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், அதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் மாணவர்கள் சிலர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற மதுரை ஐகோர்ட் கிளையும், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இதனை அவசர வழக்காக விசாரிக்கவும் சிபிஎஸ்இ கேட்டுக் கொண்டது. இதனையடுத்து இந்த 
 மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என அனுமதி அளித்தது.

மேலும் மதுரை ஐகோர்ட் கிளை விதித்த தடை உத்தரவை நீக்கியதுடன், நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை மாநில ஐகோர்ட் விசாரிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை கல்வியாளர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளதை அடுத்து நீட் தேர்வு முடிவுகள் நாடுமுழுவதும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. cbseresults.nic.in மற்றும் cbseneet.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தங்களது கட்-ஆப் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.


Tags:    

Similar News