செய்திகள்

ஜனாதிபதி தேர்தல்: சோனியா காந்தி உடன் ராஜ்நாத் சிங் திடீர் சந்திப்பு

Published On 2017-06-16 06:34 GMT   |   Update On 2017-06-16 06:34 GMT
ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, ராஜ்நாத் சிங் அடங்கிய பா.ஜ.க. குழு நேரில் சந்தித்து வலியுறுத்தியது.
புதுடெல்லி:

ஜனாபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 3 பேர் அடங்கிய குழுவை பா.ஜ.க. தலைவர் அமித்ஷா அமைத்தார். இந்த குழு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை இன்று சந்திக்க திட்டமிட்டு இருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் இன்று காலை 11 மணியளவில் சந்தித்தனர். 

புதுடெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை ஆதரிக்குமாறு சோனியா காந்தியிடம் வலியுறுத்தினர். 

சோனியா காந்தியை தொடர்ந்து பா.ஜ.க. குழு மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கோர உள்ளனர்.
Tags:    

Similar News