செய்திகள்

மொபைலில் கேம் விளையாட அனுமதிக்காததால் தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுமி

Published On 2017-05-25 18:56 GMT   |   Update On 2017-05-25 18:56 GMT
கேரள மாநிலத்தில் பெற்றோர்கள் மொபைல் போனில் கேம் விளையாட அனுமதிக்காததால் 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் பெற்றோர்கள் மொபைல் போனில் கேம் விளையாட அனுமதிக்காததால் 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தலைமுறையினரின் மொபைல் மோகம் எந்த அளவுக்கு சென்றுள்ளது என்பதற்கு உதாரணமாக கேரளாவில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொச்சியை அடுத்த கமலசேரி என்ற பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி நேற்று தொடர்ந்து மொபைல் போனில் கேம் விளையாடி வந்துள்ளார்.

தொடர்ந்து கேம் விளையாடியதை கண்ட அச்சிறுமியின் தாயார், சிறுமியை திட்டியதோடு மொபைல் போனை புடுங்கியுள்ளார். இதனால், மன உளைச்சலான அந்த சிறுமி தனது அறைக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடனே மருத்துவமனைக்கு அச்சிறுமியை குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட சிறுமி பெற்றோருக்கு ஒரே மகளாகும். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அற்ப காரணத்திற்காக தனது வாழ்க்கையை சிறுமி அழித்துக் கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News