செய்திகள்

சிற்றுண்டி திருடியதற்காக இரு சிறுவர்களுக்கு மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்த கடை உரிமையாளர்

Published On 2017-05-21 17:11 GMT   |   Update On 2017-05-21 17:11 GMT
மராட்டியத்தில் சிற்றுண்டி திருடியதற்காக இரு சிறுவர்களுக்கு கடையின் உரிமையாளர் மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்துள்ளார்.
மும்பை:

மராட்டியத்தில் சிற்றுண்டி திருடியதற்காக இரு சிறுவர்களுக்கு கடையின் உரிமையாளர் மொட்டை அடித்து, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்துள்ளார்.

மராட்டிய மாநிலம் தானே நகரில் உள்ள மளிகை கடையில் அப்பகுதியில் உள்ள இரு சிறுவர்கள் பசி காரணமாக காசு இல்லாததால் சிற்றுண்டி திருடி உண்டுள்ளனர். இதை கண்டு பிடித்த கடை உரிமையாளர் சிறுவர்களை பிடித்து அடித்து உதைத்த பின்னர் இருவருக்கும் மொட்டையடித்துள்ளார்.

பின்னர் இரு சிறுவர்களின் கழுத்திலும் செருப்பு மாலைகளை அணிவித்து சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. மேலும், இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததோடு குழந்தைகள் நல ஆனணயத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பெயரில் குழந்தைகள் நல ஆனணய அலுவலர்கள் அந்த கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News