search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிற்றுண்டி"

    • 4 வழி சான்றுகளை காலதாமதம் இன்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • காலை சிற்றுண்டி திட்டத்தை உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழியில் தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார். பொறுப்பாளர்கள் ஜெயபாரதி,தேன்மொழி, இன்பரசி, ரவிச்சந்திரன், சசி கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் விஜயகுமார் வரவேற்றார்.

    மாநில செயலாளர் வீரமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

    கூட்டத்தில் உதவி பெறும் பள்ளிகளுக்கான நான்கு வழி சான்றுகளை காலதாமதம் இன்றி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது போல் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் அனைத்து நல திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும், பணியிடை பயிற்சிகளில் ஆசிரியர்களை கருத்தாளர்களாக செயல்படுத்துவதை தவிர்த்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சி உள்ளவர்களை ஈடுபடுத்த வேண்டும்,

    எமிஸ் வலைதளத்தை பயன்படுத்தி ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையை கல்வித்துறை கண்காணிக்க வேண்டும், அரசு வழங்கும் விலையில்லா பொருட்களை ஆசிரியர்களை கொண்டு பள்ளிக்கு எடுத்துச் செல்லும் நடைமுறையை கைவிட்டு அலுவலகப் பொறுப்பில் கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் எஸ்.எம்.சி ஒப்புதல் இல்லாமல் பள்ளிக்குத் தேவையான துப்புரவு சார்ந்த பொருட்களை தனிப்பட்ட நபர்கள் மூலம் வழங்குவதை தவிர்த்துவிட வேண்டும், ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் எமிஸ் சார்ந்த ஆன்லைன் பதிவுகளை செய்ய ஆசிரியர்களை கட்டாயப்படுத்துவதை அரசு கைவிடவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் மாவட்ட பொருளாளர் ராஜம் நன்றி கூறினார்.

    • உண்ணாவிரத போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து 300 ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.
    • காலை சிற்றுண்டி திட்டத்தை அமல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாவட்டச் செயலாளர் ஈவேரா பேசினார்.

    கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் ஜூலியஸ், மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயந்தி, மேநாள் மாவட்டப் பொருளாளர் ஜோன்ஸ் ஐன்ஸ்டீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

    ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து 300 ஆசிரியர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

    அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டத்தை அமல் படுத்துவதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இத்திட்டத்தை செயல்படுத்தும் போது அதில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்த்து, இதற்கான பிரத்தியேக ஊழியர்கள் நியமனம் செய்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு மே மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கலந்தாய்வில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் மேற்கொள்ள வேண்டும்.

    கூடுதல் தேவைப்படுகின்ற பணியிடங்களிலும் மாறுதல் பெற அனுமதிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு குறித்த மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் உள்ளது.

    பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நடைபெறாமல் மற்ற பணி மாறுதல், பதிவி உயர்வு கலந்தாய்வு நடத்துவது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்.

    எனவே நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஆசிரியர் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகளை நிறுத்தி வைக்க வேண்டும்.

    இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது. முன்னதாக வட்டாரச் செயலாளர் வேதமூர்த்தி வரவேற்றார். இறுதியில் மாவட்ட துணைச் செயலா ளர் சத்யநாராயணன் நன்றி கூறினார்.

    • 895 மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
    • காய்கறி, சாம்பார், ரவா, கிச்செடி உள்ளிட்ட உணவுகள் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று தமிழ்நாட்டில் இந்த திட்டம் தொடங் கப்பட்டது.

    தஞ்சை மாநகராட் சியில் உள்ள 8 தொடக்கப் பள்ளிகளில் 375 மாணவர் களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத ்தப்பட்டு வருகிறது.

    இன்று முதல் இரண்டாம் கட்டமாக தஞ்சை மாநகராட் சியில் உள்ள 7 மாநகராட்சி நடுநிலை பள்ளிகளில் 895 மாணவர் களுக்கு காலை உணவு திட்டம் தொடங் கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு ஆணையர் சரவணக் குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். அவர்கள் மாணவர்க ளுக்கு காலை உணவு பரிமாறினர்.

    இந்த திட்டத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் ரவா உப்புமா, ரவா காய்கறிக்கு கிச்செடி , வெண்பொங்கல் ,அரிசி உப்புமா, அரிசி உப்புமா காய்கறி , சாம்பார், ரவா காய்கறிக்கு கிச்செடி உள்ளிட்ட உணவுகள் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

    இன்று வெண் பொங்கல் காய்கறி சாம்பார் மற்றும் கேசரி மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ஜெகதீசன், கண்காணிப்பாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர்கள் ரமேஷ், கார்த்திகேயன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சத்தான உணவு பொருள்கள் வழங்கப்பட்டது
    • இந்த உணவு பொருள்கள் அதிக புரதச்சத்தையும், நார்ச்சத்தையும் கொண்டுள்ளதால் அதிக நேரம் மாணவர்கள் படிக்க முடியும்.

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர உணவு வழங்கும் பணியை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா வழங்கி தொடக்கி வைத்தார்.அப்போது அவர் பேசுகையில், மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இந்த மாலை நேர சிறுதானிய சிற்றுண்டியான சுண்டல், பட்டாணி, பச்சை பயிறு, தட்டைப் பயிறு, எள்ளுருண்டை, குதிரைவாலி, சாமை ஆகிய சத்தான உணவு பொருள்களை உட்கொண்டு தங்களை தேர்வுக்கு தயார்படுத்திகொள்ள வேண்டும் .இது அதிக புரதச்சத்தையும், நார்ச்சத்தையும் கொண்டுள்ளதால் அதிக நேரம் மாணவர்கள் படிக்க முடியும். எனவே தொடர்ந்து படித்து அதிக மதிப்பெண்களை பெற மாணவ, மாணவிகள் தயாராக வேண்டும் என்றார்.நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். பள்ளி துணை ஆய்வாளர் பழனிசாமி, ஊராட்சித் தலைவர் அம்பிகா மாரிமுத்து, துணை தலைவர் பழனியம்மாள் ராஜதுரை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சின்னதுரை, துணை தலைவர் மணிகண்டன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் அகிலா, வார்டு உறுப்பினர் அருள்சாமி, கல்வி ஆர்வலர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ரமேஷ், தனலட்சுமி, பத்மாவதி, தங்கபாண்டி, வீரபாண்டி, கோகிலா, கபிலஷா, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர். பொதுத் தேர்வு முடியும் வரை இந்த உணவுகள் வழங்கப்படுகிறது.

    • காப்பிடங்களை அரசு அல்லது தனியார் தொண்டு நிறுவனங்கள் முதியோர் காப்பகம் அமைத்து வயதடைந்த முதியவர்களைப் பராமரிக்கின்றனர்.
    • முதியோர் காப்பகத்தில் தங்கியுள்ள முதியோர்களை மகிழ்விக்கும் வகையில் இந்தாண்டுக்கான தீபாவளி கொண்டாட்டம் நேற்று 21-ந்தேதி நடந்தது.

    தஞ்சாவூர்:

    வயது அதிகமாக இருப்பவர்களை அவர்களது பிள்ளைகள் கைவிட்டுவிட்ட நிலையில் அல்லது பராமரிக்க முடியாத நிலையில் முதியோர்களுக்கு காப்பிடம் ஒன்று தேவையாக உள்ளது. இந்தக் காப்பிடங்களை அரசு அல்லது தனியார் தொண்டு நிறுவனங்கள் முதியோர் காப்பகம் அமைத்து வயதடைந்த முதியவர்களைப் பராமரிக்கும் பணிகளைச் செய்கின்றன.

    தில்லையம்பூர் முதியோர் காப்பகம்

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகாவில் தில்லையம்பூர் முதியோர் காப்பகம் அமைந்துள்ளது. அரசு மானியம் பெறாத முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் தொண்டு நிறுவனம் ஆகும்.

    இயன்றவரை உதவி, இல்லாதவருக்கே என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வரும் தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தின் நிறுவனத் தலைவராக என்ஜினீயர் எம்.நடராஜன் உள்ளார். தீபாவளி கொண்டாட்டம்

    இந்த தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் தங்கியுள்ள முதியோர்களை மகிழ்விக்கும் வகையில் இந்தாண்டுக்கான தீபாவளி கொண்டாட்டம் நேற்று 21-ந்தேதி நடந்தது.

    இந்த விழாவில் காப்பகத்தின் நிறுவனத் தலைவராக என்ஜினீயர் எம்.நடராஜன், காப்பக இயக்குனர் மனோபிரியா மற்றும் பலர் கலந்து கொண்டு முதியோருடன் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

    அப்போது அனைவரும் மத்தாப்பு வகைகளை கொளுத்தி ஆனந்தமாக கொண்டாடினர். மேலும் காப்பக இயக்குனர் மனோபிரியா இல்ல முதியோருக்கு புத்தாடைகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்.

    வருடம் முழுவதும் மகிழ்ச்சி

    இதனை பெற்றுக் கொண்ட முதியோர்கள் நாங்கள் எங்கள் வீடுகளில் இருந்திருந்தால் கூட இதுபோல் ஒரு சந்தோஷமான தருணத்தை அனுபவித்து இருக்க மாட்டோம். காப்பகத்தின் நிறுவனத் தலைவராக என்ஜினீயர் எம்.நடராஜன், காப்பக இயக்குனர் மனோபிரியா எங்களை வருடம் முழுவதும் எப்போதும் சந்தோசமாக வைத்திருப்பதோடு, ஆராக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். நாங்கள் வாழும் காலம் வரை எங்கள் நன்றியும், மகிழ்ச்சியும் அவர்களோடு தொடரும்.

    இது ஒரு அன்பான உறவு, அழகான குடும்பம் என்று ஆனந்த கண்ணீருடன் கூறினர்.

    அப்துல்கலாம் வருகை

    இதையடுத்து இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த முதியோர் காப்பகம் குறித்து நிறுவனத் தலைவர் என்ஜினீயர் எம்.நடராஜன் கூறியதாவது:-

    எங்களது காப்பகத்தில் 150 முதியோர்கள் தங்கி உள்ளனர். பல இடங்களில் இருந்து முதியோர்கள் வருகின்றனர்.

    முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் எங்களின் முதியோர் இல்லத்துக்கு வந்து முதியோர்களை சந்தித்து பேசியதை மறக்க முடியாது.

    அவரின் அன்பான பேச்சு, எளிமை, தன்னடக்கம் உள்ளிட்ட பல்வேறு செயல்களை பார்த்து அனைவரும் மெய்மறந்தோம். அவர் வந்தது எங்களுக்கு பெருமை. முற்றிலும் இயற்கையான சூழலில் காப்பகம் அமைந்துள்ளதால் இங்கு தங்கி உள்ள முதியோர்களுக்கு ஒருவித அமைதி கிடைக்கிறது.

    உணவு வழங்கலாம்

    சேவை மனப்பான்மையுடன் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறோம். நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

    காலை சிற்றுண்டி மட்டும் வழங்க விரும்பும் நன்கொடையாளர்கள் ஒரு வேளைக்கு ரூ.1000 மட்டும் வழங்க வேண்டும். மதிய சிறப்பு உணவு ஒரு வேளைக்கு (வடை, பாயாசம் உள்பட) வழங்குபவர்கள் ரூ.2000 செலுத்த வேண்டும். இரவு சிற்றுண்டி ஒரு வேளைக்கு மட்டும் வழங்குபவர்கள் ரூ.1000 செலுத்தினால் போதும். முழு நாள் உணவு அளிக்க விரும்புபவர்கள் ரூ.4000 வழங்க வேண்டும்.

    நன்கொடை வழங்கலாம்

    வங்கி மூலம் பணம் அனுப்ப விரும்பும் நன்கொடையாளர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி- திப்பிராஜபுரம் A/C No.3761- Bank code no.1368 என்ற முறையில் அனுப்பலாம். அஞ்சல் பரிமாற்றத்திற்கு From IOB: IFSC No. IOBA0001368 என்ற முறையிலும், மற்ற வங்கிகளில் இருந்து Savings A/c No.136801000003761 என்ற முறையிலும் பணம் அனுப்பலாம்.

    ஆன்லைன் பணபரிமாற்றம் செய்ய விரும்புபவர்கள் 0435-2444208, செல்போன் எண்: 9487621962, 9443429077 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட தொலைபேசி எண்கள் வாயிலாகவும், thillaiorphanage@gmail.com, www.thillaiyamburorphanage.com என்பதன் வாயிலாகவும் விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். நன்கொடையாளர்களுக்கு 80G விதிவிலக்கு உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறி பின் ஊட்டிவிட்டார்.

    மதுரை- விருதுநகர் மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை நடைபெற இருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார்.

    இன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர், பள்ளி மாணவர்களுக்காக காலை உணவு திட்ட தொடக்க விழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தார்.

    அப்போது, உணவு விநியோகத்திற்கான வாகனங்கள் பயன்பாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பின்னர், ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறி பின் ஊட்டிவிட்டார். இதனால் மாணவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

    • மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்திற்கு நன்றி தெரிவித்தார்.
    • பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சீர்காழி:

    சீர்காழி என்.ஜி.ஓ. சங்க கட்டிடத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் சீனிவா சன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பாலா ஜிமு ன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தங்க.சேகர் பங்கேற்று பேசினார். கொள்ளிடம் வட்டாரத் தலைவர் சி.சேகரன் இயக்க வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார்.

    கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு ஓளிவு மறைவி ன்றி நடத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது, மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்திற்கு நன்றி தெரிவிப்பது, பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறு த்துவதுஎன்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள்நிறைவேற்ற ப்பட்டன. இதில் சீர்காழி வட்டாரசெயலாளர் கண்ணன், பொருளாளர் பாண்டியன், ஒருங்கிணை ப்பாளர் ஸ்ரீரா மன், இயக்க வழிகாட்டி ராஜசேகர், தலைமை ஆசிரியர்கள் மூர்த்தி, கோவிந்தராஜ், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×