search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூரில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு கூட்டம்
    X

    திருவாரூரில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செயற்குழு கூட்டம்

    • உண்ணாவிரத போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து 300 ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்.
    • காலை சிற்றுண்டி திட்டத்தை அமல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து மாவட்டச் செயலாளர் ஈவேரா பேசினார்.

    கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலாளர் ஜூலியஸ், மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயந்தி, மேநாள் மாவட்டப் பொருளாளர் ஜோன்ஸ் ஐன்ஸ்டீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.

    ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதி உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து 300 ஆசிரியர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

    அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டத்தை அமல் படுத்துவதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    மேலும் இத்திட்டத்தை செயல்படுத்தும் போது அதில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்த்து, இதற்கான பிரத்தியேக ஊழியர்கள் நியமனம் செய்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு மே மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கலந்தாய்வில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பிறகு இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் மேற்கொள்ள வேண்டும்.

    கூடுதல் தேவைப்படுகின்ற பணியிடங்களிலும் மாறுதல் பெற அனுமதிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு குறித்த மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் உள்ளது.

    பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நடைபெறாமல் மற்ற பணி மாறுதல், பதிவி உயர்வு கலந்தாய்வு நடத்துவது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்.

    எனவே நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஆசிரியர் பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகளை நிறுத்தி வைக்க வேண்டும்.

    இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது. முன்னதாக வட்டாரச் செயலாளர் வேதமூர்த்தி வரவேற்றார். இறுதியில் மாவட்ட துணைச் செயலா ளர் சத்யநாராயணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×