தஞ்சையில், இன்று 2-ம் கட்டமாக 7 மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்

895 மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. காய்கறி, சாம்பார், ரவா, கிச்செடி உள்ளிட்ட உணவுகள் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
தஞ்சையில் 2-ம் கட்டமாக மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
தஞ்சையில் 2-ம் கட்டமாக மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
Published on

தஞ்சாவூர்:

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக இன்று தமிழ்நாட்டில் இந்த திட்டம் தொடங் கப்பட்டது.

தஞ்சை மாநகராட் சியில் உள்ள 8 தொடக்கப் பள்ளிகளில் 375 மாணவர் களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத ்தப்பட்டு வருகிறது.

இன்று முதல் இரண்டாம் கட்டமாக தஞ்சை மாநகராட் சியில் உள்ள 7 மாநகராட்சி நடுநிலை பள்ளிகளில் 895 மாணவர் களுக்கு காலை உணவு திட்டம் தொடங் கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆணையர் சரவணக் குமார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். அவர்கள் மாணவர்க ளுக்கு காலை உணவு பரிமாறினர்.

இந்த திட்டத்தில் ஒவ்வொரு கிழமைக்கும் ரவா உப்புமா, ரவா காய்கறிக்கு கிச்செடி , வெண்பொங்கல் ,அரிசி உப்புமா, அரிசி உப்புமா காய்கறி , சாம்பார், ரவா காய்கறிக்கு கிச்செடி உள்ளிட்ட உணவுகள் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது.

இன்று வெண் பொங்கல் காய்கறி சாம்பார் மற்றும் கேசரி மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் ஜெகதீசன், கண்காணிப்பாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர்கள் ரமேஷ், கார்த்திகேயன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com