search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் மத்தாப்பு போல மகிழ வைத்த தீபாவளி கொண்டாட்டம்
    X

    தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் உள்ள முதியோர்களுடன் காப்பகத்தின் நிறுவனத் தலைவர் என்ஜினீயர் எம்.நடராஜன், தீபாவளியை கொண்டாடினார்.

    தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் மத்தாப்பு போல மகிழ வைத்த தீபாவளி கொண்டாட்டம்

    • காப்பிடங்களை அரசு அல்லது தனியார் தொண்டு நிறுவனங்கள் முதியோர் காப்பகம் அமைத்து வயதடைந்த முதியவர்களைப் பராமரிக்கின்றனர்.
    • முதியோர் காப்பகத்தில் தங்கியுள்ள முதியோர்களை மகிழ்விக்கும் வகையில் இந்தாண்டுக்கான தீபாவளி கொண்டாட்டம் நேற்று 21-ந்தேதி நடந்தது.

    தஞ்சாவூர்:

    வயது அதிகமாக இருப்பவர்களை அவர்களது பிள்ளைகள் கைவிட்டுவிட்ட நிலையில் அல்லது பராமரிக்க முடியாத நிலையில் முதியோர்களுக்கு காப்பிடம் ஒன்று தேவையாக உள்ளது. இந்தக் காப்பிடங்களை அரசு அல்லது தனியார் தொண்டு நிறுவனங்கள் முதியோர் காப்பகம் அமைத்து வயதடைந்த முதியவர்களைப் பராமரிக்கும் பணிகளைச் செய்கின்றன.

    தில்லையம்பூர் முதியோர் காப்பகம்

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகாவில் தில்லையம்பூர் முதியோர் காப்பகம் அமைந்துள்ளது. அரசு மானியம் பெறாத முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் தொண்டு நிறுவனம் ஆகும்.

    இயன்றவரை உதவி, இல்லாதவருக்கே என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வரும் தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தின் நிறுவனத் தலைவராக என்ஜினீயர் எம்.நடராஜன் உள்ளார். தீபாவளி கொண்டாட்டம்

    இந்த தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தில் தங்கியுள்ள முதியோர்களை மகிழ்விக்கும் வகையில் இந்தாண்டுக்கான தீபாவளி கொண்டாட்டம் நேற்று 21-ந்தேதி நடந்தது.

    இந்த விழாவில் காப்பகத்தின் நிறுவனத் தலைவராக என்ஜினீயர் எம்.நடராஜன், காப்பக இயக்குனர் மனோபிரியா மற்றும் பலர் கலந்து கொண்டு முதியோருடன் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

    அப்போது அனைவரும் மத்தாப்பு வகைகளை கொளுத்தி ஆனந்தமாக கொண்டாடினர். மேலும் காப்பக இயக்குனர் மனோபிரியா இல்ல முதியோருக்கு புத்தாடைகள் மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்.

    வருடம் முழுவதும் மகிழ்ச்சி

    இதனை பெற்றுக் கொண்ட முதியோர்கள் நாங்கள் எங்கள் வீடுகளில் இருந்திருந்தால் கூட இதுபோல் ஒரு சந்தோஷமான தருணத்தை அனுபவித்து இருக்க மாட்டோம். காப்பகத்தின் நிறுவனத் தலைவராக என்ஜினீயர் எம்.நடராஜன், காப்பக இயக்குனர் மனோபிரியா எங்களை வருடம் முழுவதும் எப்போதும் சந்தோசமாக வைத்திருப்பதோடு, ஆராக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். நாங்கள் வாழும் காலம் வரை எங்கள் நன்றியும், மகிழ்ச்சியும் அவர்களோடு தொடரும்.

    இது ஒரு அன்பான உறவு, அழகான குடும்பம் என்று ஆனந்த கண்ணீருடன் கூறினர்.

    அப்துல்கலாம் வருகை

    இதையடுத்து இயற்கை சூழலில் அமைந்துள்ள இந்த முதியோர் காப்பகம் குறித்து நிறுவனத் தலைவர் என்ஜினீயர் எம்.நடராஜன் கூறியதாவது:-

    எங்களது காப்பகத்தில் 150 முதியோர்கள் தங்கி உள்ளனர். பல இடங்களில் இருந்து முதியோர்கள் வருகின்றனர்.

    முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் எங்களின் முதியோர் இல்லத்துக்கு வந்து முதியோர்களை சந்தித்து பேசியதை மறக்க முடியாது.

    அவரின் அன்பான பேச்சு, எளிமை, தன்னடக்கம் உள்ளிட்ட பல்வேறு செயல்களை பார்த்து அனைவரும் மெய்மறந்தோம். அவர் வந்தது எங்களுக்கு பெருமை. முற்றிலும் இயற்கையான சூழலில் காப்பகம் அமைந்துள்ளதால் இங்கு தங்கி உள்ள முதியோர்களுக்கு ஒருவித அமைதி கிடைக்கிறது.

    உணவு வழங்கலாம்

    சேவை மனப்பான்மையுடன் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறோம். நன்கொடையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

    காலை சிற்றுண்டி மட்டும் வழங்க விரும்பும் நன்கொடையாளர்கள் ஒரு வேளைக்கு ரூ.1000 மட்டும் வழங்க வேண்டும். மதிய சிறப்பு உணவு ஒரு வேளைக்கு (வடை, பாயாசம் உள்பட) வழங்குபவர்கள் ரூ.2000 செலுத்த வேண்டும். இரவு சிற்றுண்டி ஒரு வேளைக்கு மட்டும் வழங்குபவர்கள் ரூ.1000 செலுத்தினால் போதும். முழு நாள் உணவு அளிக்க விரும்புபவர்கள் ரூ.4000 வழங்க வேண்டும்.

    நன்கொடை வழங்கலாம்

    வங்கி மூலம் பணம் அனுப்ப விரும்பும் நன்கொடையாளர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி- திப்பிராஜபுரம் A/C No.3761- Bank code no.1368 என்ற முறையில் அனுப்பலாம். அஞ்சல் பரிமாற்றத்திற்கு From IOB: IFSC No. IOBA0001368 என்ற முறையிலும், மற்ற வங்கிகளில் இருந்து Savings A/c No.136801000003761 என்ற முறையிலும் பணம் அனுப்பலாம்.

    ஆன்லைன் பணபரிமாற்றம் செய்ய விரும்புபவர்கள் 0435-2444208, செல்போன் எண்: 9487621962, 9443429077 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட தொலைபேசி எண்கள் வாயிலாகவும், thillaiorphanage@gmail.com, www.thillaiyamburorphanage.com என்பதன் வாயிலாகவும் விவரங்கள் தெரிந்து கொள்ளலாம். நன்கொடையாளர்களுக்கு 80G விதிவிலக்கு உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×