செய்திகள்

பரீட்சை பேப்பரில் காதல் கவிதைகள், சினிமா பாடல்கள் - 10 மாணவர்கள் சஸ்பெண்ட்

Published On 2017-04-30 00:35 GMT   |   Update On 2017-04-30 00:35 GMT
மேற்கு வங்காள மாநிலத்தில் 10 கல்லூரி மாணவர்கள் தங்களது பரீட்சை பேப்பரில் காதல் கவிதைகள், சினிமா பாடல்களை எழுதியதன் காரணமாக சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் மால்டாவில் உள்ள பால்குர்கத் சட்டக் கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் முடிவுற்று மாணவர்களின் பரீட்சை பேப்பர்கள் திருத்தும் பணி நடைபெற்று வருகின்றன. அதில், சில மாணவர்களின் பரீட்சை பேப்பர்களில் விடைகளுக்கு இடையே இந்தி சினிமா பாடல்கள் மற்றும் காதல் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

சுமார் 10 மாணவர்களின் பேப்பர்களில் இது போன்ற கவிதைகள், பாடல்களை கண்ட ஆசிரியர்கள், அதிர்ச்சியுடன் மாணவர்களை வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் மாணவர்களின் மேல் உள்ள குற்றம் உறுதியானதால் அவர்களை ஓராண்டுகள் சஸ்பெண்ட் செய்து கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

பொதுவாக ஒழுக்கின்மை செயல்களில் ஈடுபடும் மாணவர்களை மட்டும் தான் ஓராண்டுகள் சஸ்பெண்ட் செய்வதாகவும், ஆனால், இம்மாணவர்கள் தேர்வுகள் மீதான மாண்புகளை குலைத்து விட்டதால் ஓராண்டுகள் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சஸ்பெண்ட் காலம் முடிந்தாலும் அம்மாணவர்கள் மீண்டும் மறு அட்மிசன் செய்து இரண்டாண்டுகளை மீண்டும் பயில வேண்டும் எனவும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News