செய்திகள்

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும்: குமாரசாமி

Published On 2017-04-28 10:16 GMT   |   Update On 2017-04-28 10:16 GMT
கர்நாடகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல்வர வாய்ப்பு உள்ளது என மத சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி தெரிவித்தார்.
பெங்களூரு:

மத சார்பற்ற ஜனதாதள தலைவர் குமாரசாமி ஹூப்பள்ளியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சமீபத்தில் நடைபெற்ற குண்டல்பேட்டை, நஞ்சன்கூடு ஆகிய தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் சட்டசபை தேர்தலுக்கான முன்னோட்டம் அல்ல. கர்நாடகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல்வர வாய்ப்பு உள்ளது. சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் வகையில் மதசார்பற்ற ஜனதாதள கட்சியை பலப்படுத்த முடிவு செய்து உள்ளேன்.

மாவட்ட, வட்ட அளவில் நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து அவர்களை சட்டசபை தேர்தலுக்கு தயார் செய்ய திட்டமிட்டுள்ளேன். கட்சியில் அதிருப்தியாக உள்ளவர்கள் காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சிகளில் சேருவதை தடுக்க மாட்டேன்.

கட்சி என்பது பெற்ற தாய் போன்றது. அந்த தாய்க்கு துரோகம் நினைப்பவர்களுக்கு இறைவன் தண்டனை கொடுப்பான். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான விஸ்வநாத் விரைவில் மதசார்பற்ற ஜனதாதள கட்சியில் சேர உள்ளார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News