உள்ளூர் செய்திகள்

தாய்மார்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்பால் வாரவிழா

Published On 2022-08-07 10:02 GMT   |   Update On 2022-08-07 10:02 GMT
  • கர்ப்பிணி பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் தாய்பாலின் மகத்துவத்தையும், அவசியத்தையும் விரிவாக எடுத்துரைத்தனர்.
  • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது.

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை லயன் சங்கம், தஞ்சை டெம்பிள்சிட்டி லயன் சங்கம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து உலக தாய்பால் வாரவிழா நிகழ்ச்சியை அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடத்தியது .

அம்மாபேட்டை லயன்ஸ் சங்க தலைவர் முரளி, தஞ்சை டெம்பிள்சிட்டி லயன்சங்க தலைவர் சிவா, மாவட்ட தலைவர்கள் சுப்ரமணியன், நைனா குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் அம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் வெங்கடேஷ்குமார், சித்த மருத்துவர் ரெங்கநாயகி ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கும், தாய்மார்களுக்கும் தாய்பாலின் மகத்து வத்தையும், அவசியத்தையும், விரிவாக எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் லயன்சங்க நிர்வாகிகள்பொன்மணி, மோகன்ராம், செயலாளர் வேல்மணி,பொருளாளர் ஜனார்த்தனன், சுகாதார ஆய்வாளர் பெரியண்ணன், செவிலியர் சித்ரா மற்றும் ஏராளமான தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருநெறி மன்ற நிர்வாகி ராமநாதன் மற்றும் லயன் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News