உள்ளூர் செய்திகள்

துறையூர் பெருமாள்மலை கோவிலுக்கு குடமுழுக்கு திருவிழா செய்ய பக்தர்கள் கோரிக்கை

Published On 2022-06-25 09:39 GMT   |   Update On 2022-06-25 09:39 GMT
  • கீழே அடிவாரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் மலையின் உச்சி மீது அமைந்துள்ளது தென் திருப்பதி என்று அழைக்கப்படும் பெருமாள் மலை ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி ஆலயம்.
  • மலை பாதை வழியாக கார், வேன், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று, வணங்கக்கூடிய அமைப்பு கொண்ட வைணவத் தலம் பெருமாள் மலை.

திருச்சி:

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், துறையூர் - பெரம்பலூர் சாலையில் அமைந்திருக்கும் தென் திருப்பதி ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் குடமுழுக்கு விழா செய்ய பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

துறையூர் நகரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பெருமாள் மலை.

கீழே அடிவாரத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் மலையின் உச்சி மீது அமைந்துள்ளது தென் திருப்பதி என்று அழைக்கப்படும் பெருமாள் மலை ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி ஆலயம்.

துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மலைமீது அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி தான் குடிபாட்டு குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் மலை பாதை வழியாக கார், வேன், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் சென்று, வணங்கக்கூடிய அமைப்பு கொண்ட ஒரே வைணவத் தலம் பெருமாள் மலை மட்டுமே. கடந்த 2006ல் குடமுழுக்கு விழா இக்கோவிலுக்கு நடைபெற்றது.

தற்போது தமிழரசு இந்து அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு நலத்திட்ட உதவிகள், கும்பாபிஷேகங்கள், நாள் முழுவதும் அன்னதான திட்டம், வருகை தரும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் என இந்து அறநிலையத்துறை பக்தர்களுக்காக சேவை அளித்து வரும் நிலையில்

16 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இருக்கும் இக்கோயிலில், மராமத்து வேலைகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு விழா செய்ய இந்து அறநிலையத் துறையினர் நடவடிக்கையை கருத்தில் கொள்ள பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News