உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

எரிவாயு மயானம் அமைக்க பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம் ஆதரவு

Published On 2022-09-26 06:25 GMT   |   Update On 2022-09-26 06:25 GMT
  • பல்லடம் நகரில் சுமாா் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா்.
  • இக்கட்டான சூழ்நிலைகளில் பல்லடத்திலிருந்து திருப்பூா், கொடுவாய், சூலூா் போன்ற இடங்களுக்கு சுமாா் 20 கி.மீ.க்கு மேல் செல்ல வேண்டி உள்ளது.

பல்லடம்:

பல்லடத்தில் எரிவாயு மயானம் அமைக்க பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத் தலைவா் ஆனந்தா செல்வராஜ், செயலாளா் விமல் பழனிசாமி, பொருளாளா் காணியப்பா பரமசிவம், துணைத் தலைவா் பானு பழனிசாமி, துணைச் செயலாளா் தங்கலட்சுமி நடராஜன், ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா் ஆகியோா் பல்லடம் நகா்மன்றத் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பல்லடம் நகரில் சுமாா் 50 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா். மேலும், பல்லடம் நகரம் பல முக்கிய நகரங்களுக்கு செல்லும் சாலைகளின் சந்திப்பாக உள்ளது. தமிழக அரசின் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் பல்லடம் நகரில், நகராட்சி மூலம் எரிவாயு மயானம் அமைக்க உள்ளதாக அறிகின்றோம். இக்கட்டான சூழ்நிலைகளில் பல்லடத்திலிருந்து திருப்பூா், கொடுவாய், சூலூா் போன்ற இடங்களுக்கு சுமாா் 20 கி.மீ.க்கு மேல் செல்ல வேண்டி உள்ளது.

இந்த எரிவாயு மயானம் அமைந்தால் பல்லடம் நகர மக்கள் பெரிதும் பயனடைவாா்கள். இதனால் மக்களுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் எந்தவிதமான தீங்கும் ஏற்படாது என அறிகின்றோம். இந்த எரிவாயு மயானத்தால் மக்களுக்கு பொருள் செலவும், காலச்செலவும் மிச்சமாகும். எனவே பல்லடம் நகரில் பொதுமக்களின் ஆதரவு, நகா்மன்றத் தலைவா் மற்றும் அதிகாரிகளின் அனுமதியுடன் அமையும் எரிவாயு மயானம் அமைக்கும் திட்டத்திற்கு எங்களின் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம் என கூறியுள்ளனர்.

Tags:    

Similar News