உள்ளூர் செய்திகள்

வேணுகோபால சுவாமி மரத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

பெரிய கிருஷ்ணாபுரம் வேணுகோபால சாமி கோவில் தேர் வெள்ளோட்டம்

Published On 2023-06-02 05:06 GMT   |   Update On 2023-06-02 05:06 GMT
  • பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பாமா,ருக்மணி சமேத வேணு கோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது.
  • ரூ.5 லட்சம் செலவில் இரும்பு சக்கரம் பொருத்தி புதுப்பிக்கப்பட்டது.இந்த தேர் வெள்ளோட்டம் நேற்று வியாழக்கிழமை நடை பெற்றது.

வாழப்பாடி:

வாழப்பாடி அருகே பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பாமா,ருக்மணி சமேத வேணு கோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. பழமை யான இக்கோவில் தேர், ரூ.5 லட்சம் செலவில் இரும்பு சக்கரம் பொருத்தி புதுப்பிக்கப்பட்டது.இந்த தேர் வெள்ளோட்டம் நேற்று வியாழக்கிழமை நடை பெற்றது. மிகுந்த ஆர்வத்தோடு வடம் பிடித்த பொதுமக்களும் பக்தர்களும் ராஜ வீதிகளில் வெள்ளோட்டம் நடத்தினர்.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். கோயில் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததும், வெகு விமரிசையாக தேரோட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஊர் பெரியதனக்காரர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News