உள்ளூர் செய்திகள்

தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

சிவகிரியில் தேசிய மக்கள் நீதிமன்றம்

Published On 2022-06-27 09:40 GMT   |   Update On 2022-06-27 09:40 GMT
  • 230 வழக்குகள் கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இவற்றில் 156 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.
  • காசோலை மோசடி வழக்கு சம்பந்தமாக புகார் கொடுத்தவருக்கு ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்கப்பட்டது.

சிவகிரி:

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின் பேரில் இந்த ஆண்டின் 2-வது தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சிவகிரியில் கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சிவகிரி வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், நீதிபதியுமான கே.எல்.பிரியங்கா தலைமை தாங்கினார்.

சமரச மையத்தில் கிரிமினல் வழக்குகள் சம்பந்தமாக மொத்தம் 230 வழக்குகள் கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இவற்றில் 156 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

சிவில் வழக்குகள் சம்பந்தமாக 114 வழக்குகள் கோப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இவற்றில் 9 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

காசோலை மோசடி வழக்கு சம்பந்தமாக புகார் கொடுத்தவருக்கு ரூ.6 லட்சத்து 30 ஆயிரம் கொடுக்கப்பட்டது. அபராதத் தொகையாக ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 900 வசூலிக்கப்பட்டது.

மக்கள் நீதி மன்றத்தில் உறுப்பினர் வழக்கறிஞர் மருதப்பன், அரசு வழக்கறிஞர் பேட்ரிக் பாபு, நீதிமன்ற தலைமை எழுத்தர் கலாமணி, சிவகிரி தலைமையிடத்து துணை தாசில்தார் வெங்கட சேகர், கடையநல்லூர் தலைமையிடத்து துணை தாசில்தார் சங்கரலிங்கம் மற்றும் நீதிமன்ற வழக்கறிஞர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News