உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள்.

கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-05 09:13 GMT   |   Update On 2022-07-05 09:13 GMT
  • மதுரையில் இன்று கட்டுமான, முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி நலவாரிய அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை

மதுரையில் இன்று கட்டுமான, முறைசாரா தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொழிலாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய சர்வர் செயல்பாட்டை தடையில்லாமல் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணியிடத்தில் மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு உதவி நிதி 2 ஆண்டுகளாக கிடைக்கப்பெறாத நிதி உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை மரணமடைந்த தொழிலாளர் குடும்பத்திற்கு 3 மாதத்திற்குள் உதவி நிதியை வழங்க வேண்டும்.

முறைசார தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகைகள் ஒரு மாதத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆயுள் சான்று கொடுத்த தொழிலாளர்களுக்கு உடனடியாக பென்சன் தொகையை வழங்க வேண்டும். 60 வயது முடிந்த கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும், 55 வயதில் பெண் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும்.

தமிழக அரசு அறிவித்துள்ள வீட்டு வசதித் திட்டத்தை எளிமைப்படுத்தி தேவையில்லாத ஆவண ங்களை கேட்பதை கைவிட வேண்டும். திருமண உதவி பெறுவதற்கு தேவையில்லாத ஆவ ணங்கள் கோருவதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானம் மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் மதுரை எல்லீஸ்நகரில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சுப்பையா தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாநகர் மாவட்டச் செயலாளர் தெய்வராஜ், தலைவர் கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் அரவிந்தன், தலைவர் கண்ணன், கட்டுமான தொழிலாளர் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், புறநகர் மாவட்டச் செயலாளர் மணிக்குமார், மாநில பொருளாளர் லூர்துரூபி உள்பட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News