உள்ளூர் செய்திகள்

வண்ண மீன் வளர்க்க மானியம்

Published On 2022-08-18 08:59 GMT   |   Update On 2022-08-18 08:59 GMT
  • வண்ண மீன் வளர்க்க மானியம் வழங்கும் திட்டம் உள்ளது.
  • பயனாளிகள் பெயரில் சொந்த நிலம்

கரூர்:

பிரதம மந்திரி மத்திய மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறிய, நடுத்தர அளவிலான அலங்கார மீன் வளர்க்கும் திட்டத்தில் ஒரு அலகிற்கு நடுத்தர அளவிலான தொட்டிகள் அமைத்து அலங்கார மீன் வளர்ப்பிற்கு ஆகும் செலவு ரூ.8 லட்சம். பொது பிரிவினருக்கு 40 சதவீதம் என ரூ.3.20 லட்சம், பட்டியல், பழங்குடியினர், பெண்களுக்கு 60 சதவீதம் என ரூ.4.80 லட்சம் மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின்படி தமிழகத்தில் திருச்சி, கரூர் மாவட்டங்களில் வண்ண மீன் வளர்ப்பினை ஊக்குவித்திட மானியம் வழங்குதல் திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு பயனாளிகள் பெயரில் சொந்த நிலம் இருத்தல் வேண்டும் அல்லது குத்தகை நிலம் என்றால் குறைந்தது 7 ஆண்டுகள் குத்தகை காலம் இருத்தல் வேண்டும். குத்தகை விவரம் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

கடந்த 2018 -19-லிருந்து 2020 -21 ஆண்டு வரை உள்ள கால கட்டத்தில் மத்திய, மாநில அரசிடமிருந்து உள்ளீட்டு மானியம் பெற்ற மீன் வளர்ப்பு விவசாயிகள் இம்மானியம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் திருச்சி, கரூர் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை வரும் 20-ந் தேதிக்குள் திருச்சி, கரூர் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் எண்: 4, காயிதே மில்லத் தெரு, காஜா நகர், மன்னார்புரம், திருச்சி 620 020 என்ற முகவரியில் ஒப்படைக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News