உள்ளூர் செய்திகள்

காளான் வளர்ப்புக்கு மானியம்

Published On 2022-12-22 07:20 GMT   |   Update On 2022-12-22 07:20 GMT
  • காளான் வளர்ப்புக்கு மானியம் வழங்கப்படுகிறது.
  • அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்

கரூர்

கரூர் தாந்தோணி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் கவிதா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 2022-23ம் ஆண்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாந்தோணி வட்டாரத்தில் மணவாடி, பள்ளபாளையம் மற்றும் கோயம்பள்ளி ஆகிய கிராமங்கள் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி தோட்டக்கலை துறை சார்பில் கிராமங்களில் காளான் வளர்ப்பு மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டலாம். காளான் வளர்ப்பில் ஈடுபடுபவருக்கு 600 சதுர அடியில் காளான் வளர்ப்பு குடில் அமைக்கவும், தேவையான பொருட்கள் வாங்கவும் தோராயமாக ரூ.2 லட்சம் செலவாகும். இதில் 50 சதவீதம் பின் ஏற்பு மானியமாக அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். விவசாயிகள் மட்டுமின்றி நில மற்றவர்களும் 50 சதவீத மானியத்துடன் தங்கள் வீட்டின் பின்புறத்தில் காளான் பண்ணை அமைத்து இத்திட்டத்தில் பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Tags:    

Similar News