உள்ளூர் செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 777 பேர் நீட் தேர்வு எழுதவில்லை

Published On 2022-07-18 09:05 GMT   |   Update On 2022-07-18 09:05 GMT
  • 2022-2023-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது.
  • தாமதமாக வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

சேலம்:

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'நீட்' என்ற நுழைவு தேர்வு இந்திய அரசின் தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 2022-2023-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகள், சி.பி.எஸ்.இ பள்ளி, என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 12 இடங்களில் தேர்வு மையங்ளில் நேற்று தேர்வு நடந்தது. அதில் 10 ஆயிரத்து 262 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் 9 ஆயிரத்து 485 பேர் மட்டும் தேர்வு எழுதினர்.

77 பேர் தேர்வு எழுதவில்லை

தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை5.20 மணிக்கு முடிவடைந்தது. முன்னதாக வெப்பநிலை கண்டறியப்பட்டு, கொரோன வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு, வழக்கமான கெடுபிடிகளுடன் மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தாமதமாக வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. சுமார் 777 பேர் தேர்வு எழுத வரவில்லை. 

Tags:    

Similar News