உள்ளூர் செய்திகள்

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொந்த செலவில் கால்வாய் சீரமைப்பு பணி தொடக்கம் - விவசாயிகள் பாராட்டு

Published On 2022-11-05 08:54 GMT   |   Update On 2022-11-05 08:54 GMT
  • பருவமழை பெய்து வருவதால் அணைக்கட்டுகளிலிருந்து கடந்த சில வாரங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது
  • தருவைகுளத்திற்கு வரும் நீர்வழித்தடங்கள் பல இடங்களில் அழிந்த நிலையில் உள்ளது

உடன்குடி:

தமிழ்நாட்டில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. அணைக்கட்டுகளிலிருந்து கடந்த சில வாரங்களாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக திருச்செந்தூர் பகுதியிலுள்ள எல்லப்பநாயக்கன்குளம் வேகமாக நிரம்பி வருகிறது. இதிலிருந்து வெளியேறும் உபரிநீர் குலசேகரன்பட்டினம் தருவைகுளத்திற்கு வரும். தற்போது தருவைகுளத்திற்கு வரும் நீர்வழித்தடங்கள் பல இடங்களில் அழிந்த நிலையில் உள்ளது. இதனால் இக்குளத்தில் முறையாக தண்ணீர் வருவதற்கு வாய்பு இல்லை, இதனையடுத்து சமூகஆர்வலர்கள், விவசாயிகள் ஆகியோர் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும்கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து, நிலத்தடி நீரில் கடல்நீர் உட்புகுந்து உப்புநீராக மாறியுள்ளது. இதனால் குடிநீர், மற்றும்விவசாயத்திற்கு தண்ணீர் தட்டுபாடு வரும் நிலை உருவாகும். ஆண்டுதோறும் குளங்கள் நிரப்பினால், நிலத்தடி நீர் மற்றும் பம்பு செட் விவசாயம் செய்யும் கிணற்று தண்ணீர்தன்மைமாறாமல் இருக்கும் என கூறினர்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது சொந்த செலவில் எல்லப்பநாயக்கன்குளத்திலிருந்து தருவைகுளம் பகுதி வரை சிதிலமடைந்த நீர்வழித்தடங்களை சீரமைத்தும், புதியதாக கால்வாய்கள் அமைத்து உடன்குடி ஊரணிக்கு தண்ணீர் கொண்டு செல்லவும், மழைக்காலங்களில் வடிகால் பகுதியிலிருந்து தண்ணீரை சேமிக்கும் வகையில் நீர்வழித்தடங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியினை உடன்குடி யூனியன்சேர்மன் பாலசிங் ஆய்வுமேற்கொண்டார். அப்போது சமூகஆர்வலர், ஆசிரியர் சிவலூர் ஜெயராஜ், ஒன்றிய பிரதிநிதி ஆட்டோகணேசன், வக்கீல் செல்வகுமார் உட்பட சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர். கால்வாய் சீரமைப்பு பணிக்கு சொந்த செலவில் நடவடிக்கை எடுத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விவசாயிகள் பாராட்டினர்.

Tags:    

Similar News