உள்ளூர் செய்திகள்

போட்டியை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி. அருகில் மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் பலர் உள்ளனர்.

நெல்லையில் விழிப்புணர்வு மினிமராத்தான் ஓட்டம்

Published On 2022-07-16 09:45 GMT   |   Update On 2022-07-16 09:45 GMT
  • மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஒலிம்பியாட் சதுரங்கப்போட்டி நடைபெறுகிறது.
  • இதில் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லை:

மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஒலிம்பியாட் சதுரங்கப்போட்டி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினிமாராத்தான் விழிப்புணர்வு ஓட்டம் பாளை அண்ணா விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது.

இந்த ஓட்டத்தை அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மாநகர கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் 120 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாரத்தான் ஓட்டம் அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கி அரசு தலைமை மருத்துவமனை வரை சென்று மீண்டும் விளையாட்டு அரங்கை வந்தடைந்தது.

மாணவர்கள் கையில் சதுரங்க அட்டை போன்ற வடிவமைப்பை ஏந்திக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் மண்டல முதுநிலை மேலாளர் வீரபத்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி, சதுரங்க கழக பொறுப்பாளர்கள் பால்குமார், செல்வமணிகண்டன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News