உள்ளூர் செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை வழியாக 12 ரெயில்கள் இயக்கம்

Published On 2022-06-05 10:02 GMT   |   Update On 2022-06-05 10:02 GMT
  • செங்கோட்டை வழியாக 2 ஆண்டுகளுக்கு பிறகு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
  • பொதுமக்கள் மகிழச்சியடைந்துள்ளனர்.


செங்கோட்டை:

கொரோனா காரணமாக வழக்கமாக இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரெயில் உள்ளிட்ட பல ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டது.

தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் அந்த ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து வெவ்வேறு ஊர்களுக்கு 12 பயணிகள் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி நள்ளிரவு 12.45 மணிக்கு பாலக்காடு செல்லும் தினசரி பாலருவி எக்ஸ்பிரஸ், அதிகாலை 3 மணிக்கு நெல்லை செல்லும் தினசரி பாலருவி எக்ஸ்பிரஸ்,

அதிகாலை 3.50 மணிக்கு கொல்லம் செல்லும் தினசரி எக்ஸ்பிரஸ், காலை 6.40 மணிக்கு நெல்லை செல்லும் தினசரி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.

மேலும், காலை 7 மணிக்கு மதுரை செல்லும் தினசரி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ், காலை 11.35 மணிக்கு கொல்லம் செல்லும் தினசரி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ், பிற்பகல் 3.05 மணிக்கு சென்னை செல்லும் தினசரி எக்ஸ்பிரஸ், பிற்பகல் 3.45 மணிக்கு மதுரை செல்லும் தினசரி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் செல்கிறது.

தொடர்ந்து மாலை 4.50 மணிக்கு வாரந்தோறும் வியாழன், சனி, ஞாயிற்று கிழமைகளில் செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ், மாலை 5.50 மணிக்கு நெல்லை செல்லும் தினசரி முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ்,

மாலை 6.20 மணிக்கு சென்னை செல்லும் தினசரி பொதிகை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், இரவு 7.55 மணிக்கு நாகப்பட்டணம் செல்லும் வாராந்திர விரைவு ரெயில்களும் இயக்கப்படுகிறது.

தற்போது செங்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து 12 ரெயில் சேவை நடைபெறுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News