என் மலர்

  நீங்கள் தேடியது "Senkottai"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேசியக்கொடிகள் பொதுமக்களுக்கு வீடுவீடாக சென்று இலவசமாக விநியோகிகப்பட்டது.
  • நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார்.

  செங்கோட்டை:

  செங்கோட்டையில் ரோட்டரி கிளப் சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு இலவச தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி தலைமை தாங்கினார்.

  நகராட்சி ஆணையாளா் பார்கவி, சுகாதார அலுவலா் இராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலைவகித்தனா். செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவா் பால்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து ரோட்டரி கிளப் சார்பில் சுமார் இரண்டு ஆயிரம் தேசியக்கொடிகள் நகர்மன்ற தலைவா் இராமலெட்சுமியிடம் வழங்கப்பட்டது.

  பின்னா் தேசியக்கொடிகள் பொதுமக்களுக்கு வீடுவீடாக சென்று இலவசமாக விநியோகிகப்பட்டது. நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் செயலாளா் வழக்கறிஞா் அபுஅண்ணாவி, பொருளாளா் இராமகிருஷ்ணன், சரவணமுத்தையா, உறுப்பினா் காதர்மைதீன், நகராட்சி பணியாளா்கள், சுகாதார பணிமேற்பார்வையாளா்கள், துாய்மை இந்திய திட்ட பணியாளா்கள் சுகாதார பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

  செங்கோட்டை நகராட்சி 3-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் சுடர்ஒளிராமதாஸ் தனது சொந்த நிதியிலிருந்து தனது 3-வது வார்டு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று இலவசமாக தேசியக்கொடியினை வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளா் பார்கவி, சுகாதார அலுவலா் இராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி, முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவா் கணேசன், சுகாதார மேற்பார்வையாளா்கள் சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கவுசல்யா படிப்பை முடித்துவிட்டு தென்காசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார்.
  • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுசல்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  செங்கோட்டை:

  செங்கோட்டையை அடுத்த கண்ணுப்புளி மெட்டு மெயின்ரோட்டை சேர்ந்தவர் சண்முக ராஜா(வயது 52). இவரது மகள் கவுசல்யா(26).

  திருமணம் நிச்சயம்

  கவுசல்யா படிப்பை முடித்துவிட்டு தென்காசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக பெற்றோர் மாப்பிள்ளை தேடி வந்தனர்.

  சமீபத்தில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சய தார்த்தம் நடந்துள்ளது. அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் கவுசல்யா யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுசல்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோர் வந்து பார்த்தபோது கவுசல்யா அவரது அறையில் பிணமாக தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்.

  இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த செங்கோட்டை போலீசார், கவுசல்யா உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கவுசல் யாவின் தற்கொ லைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செங்கோட்டை அருகே உள்ள சிவநல்லூர், இலத்தூர், அச்சன்புதூர், சிவராமபேட்டை, கொடிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி நடைபெறுகிறது.
  • தற்போது தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் தக்காளி விலை குறைந்து காணப்படுகிறது.

  செங்கோட்டை:

  தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சிவநல்லூர், இலத்தூர், அச்சன்புதூர், சிவராமபேட்டை, கொடிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி நடைபெறுகிறது.

  அப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் கார், பிசான சாகுபடிக்கு அடுத்ததாக பூ மகசூலான தக்காளி, கத்தரிக்காய், வெண்டை, பூசணிக்காய், பச்சை மிளகாய் மற்றும் சாம்பார் வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.

  இந்நிலையில் தக்காளிக்கு நிலையான விலை இல்லாததால் ஆண்டுதோறும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தக்காளி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  தற்போது தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் தக்காளி விலை குறைந்து காணப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ தக்காளியை ரூ. 4-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

  ஆனால் ஒரு கிலோ தக்காளியை பயிரிட ரூ. 8 வரை செலவாகும் நிலையில் அதில் பாதி அளவில் தான் விற்பனை ஆவதால் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  இதனால் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் பொரும்பாலான இடங்களில் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனர். அவைகள் செடியிலேயே அழுகும் நிலையில் உள்ளது.

  விளைச்சல் உள்ள காலங்களில் தக்காளியை பாதுகாத்து பற்றாக்குறை காலங்களில் பயன்படுத்த முடியாததே இதற்கு காரணம். என அவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: -

  3 மாதங்களுக்கு முன்னர் நடவு செய்து கடந்த ஒரு மாதமாக தக்காளி பறித்து புளியங்குடி மற்றும் கடையநல்லூர், பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் விற்று வருகிறோம்.

  ஒரு வாரமாக தக்காளி கொள்முதல் விலை சரிந்து வருகிறது. வாரச்சந்தையில் 12 கிலோ தக்காளி கூடை ரூ. 50 முதல் ரூ. 70-க்கு தான் வியாபாரிகள் வாங்கி வருகின்றனர். தக்காளி பயிரிட்டு 2 மாதங்களுக்கு பின்னர் காய் பறிக்கிறோம். 2 முறை உரம் போடுகிறோம். பூச்சி தாக்குதல் இருந்தால் மருந்து அடிக்கிறோம்.

  வாரம் 2 முறை தண்ணீர் பாய்ச்சி ஒரு முறை முழுமையாக களை எடுத்து, மண் அணைத்து தக்காளி பயிர் செய்கிறோம். மேலும் தக்காளியை பறிக்க கூலி, சந்தைக்கு கொண்டு செல்ல பயணக்கட்டணம் என அனைத்தும் சேர்த்து கிலோவுக்கு ரூ. 2 முதல் ரூ. 2.50 வரை செலவாகிறது.ஆனால் ஒரு கிலோ தற்போது ரூ. 4 முதல் ரூ. 5-க்கு விற்பளையாகிறது.இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

  விளைந்த தக்காளியை பறிக்காமல் செடியில் அழுகும்படி விடவும் மனம் இல்லை. வரத்து நாள்தோறும் அதிகளவில் உள்ளதால் விலை ஏறும் என்ற உறுதியும் இல்லாததால் இருப்பு வைக்கவும் முடியாத நிலை உள்ளது.

  இத்தகைய நிலையை மாற்ற தக்காளி சீசன் காலத்தில் சேமித்து வைக்க குளிர்தன கிடங்கு எங்கள் பகுதியில் அமைத்து கொடுக்க வேண்டும். மேலும் தக்காளி ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து அரசு செலவில் கண்காணிக்கபட்டால் விவசாயத்தை நம்பிய எங்களை போன்ற விவசாயிகள் பயனடைவார்கள். மேலும் மாவட்டத்தில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.

  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 75-ம்ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் தேசிய கொடியை ஏந்தி சென்றனர்.
  • பேரணிநகரமுக்கிய வீதிகளின்வழியாக சென்று பஸ்நிலையம் அருகில் இருக்கும். சுதந்திரபோராட்ட தியாகி வாஞ்சிநாதன் சிலை முன்பு வந்தடைந்தது.

  செங்கோட்டை:

  செங்கோட்டையில் பாரதீயஜனதாகட்சி நகர இளைஞர் அணி சார்பில் 75-ம்ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் அனைவரும் கையில் தேசிய கொடியை ஏந்தி நடைபேரணி சென்றனர்.

  இந்த பேரணி தாலூகாஅலுவலகம் முன்பு இருந்து புறப்பட்டது. இளைஞர்அணித்தலைவர் வீரசிவா தலைமை தாங்கினார்.

  பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் வேம்புராஜ். பொதுச்செயலாளர்கள் பாலகிருஷ்ணன், கோமதிநாயகம்.ஒ.பி.சி.அணி மாவட்ட தலைவர் மாரியப்பன் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.

  பேரணிநகரமுக்கிய வீதிகளின்வழியாக சென்று பஸ்நிலையம் அருகில் இருக்கும். சுதந்திரபோராட்ட தியாகி வாஞ்சிநாதன் சிலை முன்பு வந்தடைந்தது.

  பின்பு வாஞ்சிசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்புசாரா பிரிவு துணை தலைவர் பேச்சி முத்து, மாவட்ட கூட்டுறவுபிரிவு செயலாளர் வர்மா தங்கராஜ், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணைத்தலைவர் சென்பாகராஜன் நகர பொருளாளர் ராம்குமார், இளைஞரணி துணைத்தலைவர் அருண்சங்கர், பொதுச் செயலாளர் ஸ்ரீராம்கார்த்திக், செயலாளர்கள் முத்துக்குமார், மகாராஜன், பொருளாளர் கார்த்திக் மற்றும் அணி பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
  • தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை பகுதியில் மண்பாண்ட பொருட்கள், பொம்மைகள், அலங்கார பொருட்கள் மற்றும் விளக்குகள் விற்பனை நிலையம் உள்ளது.

  செங்கோட்டை:

  விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.

  தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரை பகுதியில் மண்பாண்ட பொருட்கள், பொம்மைகள், அலங்கார பொருட்கள் மற்றும் விளக்குகள் விற்பனை நிலையம் உள்ளது.

  அங்கு விநாயகர் சதுர்த்தி வழிபாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விநாயர் சிலைகள் தயார் செய்து வருகிறார்கள்.

  ஆந்திரா மாநிலம் விஜயவாடா, திருப்பதி மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் தயாரிக்க தேவையான கிழங்குமாவு, காகித கூழ் உள்ளிட்ட மூல பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. அதன்மூலம் பல லட்சம் மதிப்பீட்டில் சிலைகளை 30-க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு தயாரித்து வருகின்றனர்.

  இங்கு ஒரு அடி முதல் 16 அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்காக உள்ளது. இந்த சிலை ரூ. ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  இங்கு தயார் செய்யப்படும் சிலைகள் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்பபடுகிறது. இது குறித்து சிலைகள் தயாரிப்பாளர்கள் கூறியதாவது:-

  கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விழாக்கள் நடத்தப்படாததால் வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட பல லட்சம் மதிப்பிலான விநாயகர் சிலைகள் தேக்கமடைந்தது. இதனால் பெரும் நஷ்டம் மடைந்திருந்தோம்.

  இந்தாண்டு வழக்கம் போல விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனால் தற்போது அதிகளவில் ஆர்டர்கள் வந்துள்ளன.

  நாங்கள் புதிதாக தயாரிக்கும் விநாயகர் சிலையானது எளிதில் கரையக் கூடிய வகையில் பேப்பர்கூழ், ஜவ்வரசி, கிழங்குமாவு, களி மண் போன்றவற்றால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் யாருக்கும் பாதிப்பில்லா வண்ணம் விநாயகர் சிலைகள் தயாரிக்க பட்டுள்ளது.

  தற்போது எங்களிடம் மூன்றுமுக விநாயகர், நரசிம்ம விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், சயண விநாயகர், நந்திகேஷ்வர விநாயகர், கற்பக விநாயகர், திருப்பதி விநாயகர், சிவன்பார்வதி விநாயகர், சிங்கவாகன விநாயகர், எலி, நந்தி உள்ளிட் பல வடிவங்களில் 30 மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து வருகிறோம்.

  அவைகள் செங்கோட்டை மட்டுமல்லாது கேரள மாநிலத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. சிலைகள் அவரவர்கள் தேவைக்கு ஏற்ப விலையில் அமைந்துள்ளதால் அதிகளவு மக்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் இவற்றை ஏராளமான மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செங்கோட்டை நகராட்சி 12-வது வார்டு நீராத்துலிங்கம் தெரு பகுதியில் கடந்த 13ஆண்டுகளாக ஒருமுனை மின்சார வசதி (சிங்கிள் பேஸ்) இருந்து வந்துள்ளது.
  • நகர்மன்ற உறுப்பினா் இசக்கித்துரை பாண்டியனிடம் அந்த பகுதி பொதுமக்கள் மும்முனை மின்சார வசதி செய்து தரக்கோரி கோரிக்கை வைத்தனா்.

  செங்கோட்டை:

  செங்கோட்டை நகராட்சி 12-வது வார்டு நீராத்துலிங்கம் தெரு பகுதியில் கடந்த 13ஆண்டுகளாக ஒருமுனை மின்சார வசதி (சிங்கிள் பேஸ்) இருந்து வந்துள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் மும்முனை மின்சார வசதி செய்து தரக்கோரி சம்பந்தபட்ட அலுவலகத்தில் மனுக்கள் அனுப்பி வைத்துள்ளனா். ஆனால் இதுவரையில் அந்த பகுதி பொதுமக்களுக்கு மும்முனை மின்சார வசதி செய்து தரப்படாமல் இருந்து ள்ளது. இதனையடுத்து தற்போதைய அந்த வார்டு நகர்மன்ற உறுப்பினா் இசக்கித்துரைப் பாண்டியனிடம் அந்த பகுதி பொதுமக்கள் மும்முனை மின்சார வசதி செய்து தரக்கோரி கோரிக்கை வைத்தனா்.

  உடனே இசக்கித்துரைப் பாண்டியன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த பகுதிக்கு மும்முனை மின்சார வசதி செய்து தரக்கோரி கோரிக்கை வைத்தார். இதனையடுத்து செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம் (தென்காசி), உதவி செயற்பொறியாளா் (செங்கோட்டை) குத்தாலிங்கம், மின்பொறியாளா் ஜெயனுலாபுதீன், போர்மேன் ஸ்ரீஜித், மின்பாதை ஆய்வாளா் கருப்பசாமி சுந்தரம் மற்றும் மின் ஊழியா்கள் சம்ப ந்தப்பட்ட நீராத்துலிங்கம் தெரு பகுதிக்கு வந்து மின் பாதைகளை சரி செய்து அப்பகுதிக்கு மும்முனை மின்சார வசதி செய்து கொடுத்தனா்.

  இதனையடுத்து தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை அறிந்து அப்பகுதி பொதுமக்கள் 12-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் இசக்கித்துரைப்பாண்டியன் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள், அலுவலா்கள், மின் ஊழியா்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சட்டசபையில் வாஞ்சிக்கு மணிமண்டபம் வேண்டும் என்று கேட்டு அது ஏற்கப்பட்டு மணிமண்டபமும் செங்கோட்டையில் கட்டப்பட்டு விட்டது.
  • பெருந்தலைவர் காமராஜர் பேத்தி மாநில காங்கிரஸ் செயலாளர் கமலிகா காமராஜர் தலைமையில் நகர்மன்ற தலைவர் ராமலெட்சுமியிடம் மனு கொடுக்கப்பட்டது.

  செங்கோட்டை:

  செங்கோட்டையில் நகராட்சி முத்துசாமி பூங்கா வளாகத்தில் வாஞ்சிநாதன் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் கட்டுவதற்காக 1957-ம் ஆண்டில் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த போது இந்த மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் அடிக்கல் நாட்டிய கல்லானது யாராலும் கண்டு கொள்ளப்படாமல் சாதாரண நிலையில் வைக்கப்பட்டிருந்தது.

  சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தலைவர் குமரிஅனந்தன் இங்கு வந்து சாலையில் கிடந்த கல்லை எடுத்து நகராட்சியில் ஒப்படைத்து நீங்கள் இதனை பத்திரமாக வைக்க வேண்டுமென்றும் மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கூறிச் சென்றார்.

  சட்டசபையில் வாஞ்சிக்கு மணிமண்டபம் வேண்டும் என்று கேட்டு அது ஏற்கப்பட்டு மணிமண்டபமும் செங்கோட்டையில் கட்டப்பட்டு விட்டது. ஆனால் அடிக்கல் நாட்டிய கல், கண்டு கொள்ளப்படாமல் இன்றுவரை நகராட்சியிலே கிடைக்கின்றது. இதனை வாஞ்சி மணி மண்டபத்தின் முன்பு நிலை நிறுத்த வேண்டும் என்று பெருந்தலைவர் காமராஜர் பேத்தி மாநில காங்கிரஸ் செயலாளர் கமலிகாகாமராஜர் தலைமையில் நகர்மன்ற தலைவர் ராமலெட்சுமியிடம் மனு கொடுக்கப்பட்டது.

  நிகழ்ச்சியில் மாநில செயலாளா் ஆலங்குளம்செல்வராஜ், மாநில இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் அப்துல்காதர், மாவட்ட துணைத்தலைவா்கள் ராம்மோகன், மேலநீலிதநல்லூர் மனோகா், கிளாங்காடுமணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் ரெசவுமுகம்மது, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவா் சுரேஷ், துணைத்தலைவா் பால்சாமி, முன்னாள் பஞ்சாயத்து யூனியன் தலைவா் சட்டநாதன், செங்கோட்டை வட்டார தலைவா் கார்வின், வட்டாரத்துணைத்தலைவா்கள் கதிரவன், கட்டளைராமர், செங்கோட்டை நகரத்தலைவா் இராமர், துணைத்தலைவா் கோதரிவாவா, செயலாளா் இசக்கியப்பன், இளைஞரணி தலைவா் சங்கரலிங்கம், செயலாளா் ராஜீவ்காந்தி, வார்டு தலைவா்கள் கோட்டைச்சாமி, கந்தவேல்முருகன், கடையநல்லுார் நகரகாங்கிரஸ் செயலாளா்கள் யூசூப், நவாஸ்கான், கேப்டன்கோதரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
  • தொடர்ந்து மகா அபிஷேகமும் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது.

  செங்கோட்டை:

  ஆடி முதல் வெள்ளிக் கிழமையையொட்டி செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பால் குட ஊர்வலமானது குலசேகரநாத கோவில் முன்பு அக்ரஹார வழியாக கோவிலை வந்தடைந்தது.

  அதனைத்தொடர்ந்து மகா அபிஷேகமும் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளைச் அக்ரஹார இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் செய்திருந்தனர்.

  இதனை போன்று மேலூர் உச்சிமகாளி அம்மன் கோவில், முத்துகிழவி அம்மன் கோவில் உள்பட செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கோவில்களில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆடி கூழ் வழங்கி வழிபட்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஓவிய ஆசிரியர் முருகையா மற்றும் ஜெய்சிங் நடுவராக இருந்து சிறந்த ஓவியத்தை தேர்வு செய்தார்கள்.
  • 12 பள்ளிகளில் இருந்து 116 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  செங்கோட்டை:

  செங்கோட்டை நூலகத்தில் வைத்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அதன் ஒலிம்பியாட் சின்னம் வரையும் ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் 12 பள்ளிகளில் இருந்து 116 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

  பரிசளிப்பு விழாவில் வாசகர் வட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். இணைச்செயலாளர் செண்பக குற்றாலம் வரவேற்புரை ஆற்றினார். இலஞ்சி டேனியல் கல்லூரி நூலகர் ஏஞ்சலின் வாழ்த்துரை வழங்கினார்.

  ஓவிய ஆசிரியர் முருகையா மற்றும் ஜெய்சிங் நடுவராக இருந்து சிறந்த ஓவியத்தை தேர்வு செய்தார்கள். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செங்கோட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் சின்னத்துரை வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். நூலகர் ராமசாமி நன்றி கூறினார் விழா ஏற்பாடுகளை விஜி முத்துமாரி மற்றும் கார்த்திக் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 11-ந் தேதி மேக்கரை-அணைக்கட்டு பகுதியில் காசிர் அலி, ஜைத்தூன் பீவி ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
  • கஞ்சா விற்பனை தொடர்பான பிரச்சினையில் பேரனை கொன்ற பாட்டியையும் வாலிபர் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

  செங்கோட்டை:

  தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் அருகே மேக்கரை கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் கனி. இவரது மனைவி ஜைத்தூன் பீவி (வயது 70).

  இவர்களுடைய மூத்த மகன் முகமது கனியின் மகன் காசிர் அலி (26). கூலி தொழிலாளி. இந்நிலையில் கடந்த 11-ந் தேதி மேக்கரை-அணைக்கட்டு பகுதியில் காசிர் அலி, ஜைத்தூன் பீவி ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

  கொலை கும்பலை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் வேல்கனி, ஷியாம் சுந்தர் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் தீவிரமாக தேடி வந்தனர்.

  இந்நிலையில் கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கஞ்சா விற்பனை தொடர்பாக காசிர் அலியை அடித்துக் கொன்றது தெரியவந்தது.

  அதனை அவரது பாட்டி ஜைத்தூன் பீவி பார்த்து விட்டதால் வெளியே சொல்லி விடுவார் என நினைத்து அவரையும் அந்த வாலிபர் கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற 70 மாணவர்களுக்கு கல்வி வளா்ச்சி விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • வாசகர் வட்டத்தலைவா் பொறியாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

  செங்கோட்டை:

  செங்கோட்டை அரசு பொதுநூலக கட்டிடத்தில் செங்கோட்டை, தென்காசி வட்டாரத்தில் உள்ள 35 பள்ளிகளிலிருந்து 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற 70 மாணவர்களுக்கு கல்வி வளா்ச்சி விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

  நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத்தலைவா் பொறியாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வாசகர் வட்ட இணைச்செயலாளா் செண்பக குற்றாலம் முன்னிலை வகித்தார். வாசகர் வட்டச்செயலாளா் நல்நூலகா் ராமசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து நெல்லை ஆலடி அருணா கல்வி குழும செயலாளா் ஆலடிஎழில்வாணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கல்வி வளர்ச்சி விருதுகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.

  நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரம்யா, ஐன்ஸ்டின் கல்லுாரி முதல்வா் முருகேசன், விழுதுகள் அறக்கட்டளை நிறுவனா் சேகர், எஸ்.எஸ்.ஏ. திட்ட மேற்பார்வையாளா் சுப்புலெட்சுமி, டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லுாரி நுாலகா் ஏஞ்சலின், நுாலக ஓவிய ஆசிரியா் முருகையா, ஆசிரியைஅமுதா, தாயின் மடியில் சமூக நல அறக்கட்டளை நிறுவனா் கோமதிநாயகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில் செங்கோட்டை, தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் வாசகர் வட்ட பொருளாளா் தண்டமிழ்தாசன் சுதாகர் நன்றி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print