உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செல்போன் கடையில் திருடிய 3 பேர் கைது

Published On 2022-07-21 05:29 GMT   |   Update On 2022-07-21 05:29 GMT
  • வேடசந்தூர் அருகே தனியார் செல்போன் கடையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.
  • திருடிய நபர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேட்டில் தனியார் செல்போன் கடை உள்ளது. இந்த கடையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இங்கு வேலை பார்த்த சூர்யா என்ற வாலிபர் வேலையை விட்டு நின்றுவிட்டார். அதன்பிறகு கடந்த சனிக்கிழமை கடைக்குள் புகுந்த ஒரு கும்பல் ரூ.2லட்சம் மதிப்பிலான செல்போன்களை திருடிச்சென்றனர்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் சதாசிவம் வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இதனிடையே வாகனதணிக்கையில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக ஒரே பைக்கில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். இருந்தபோதும் போலீசார் அவர்களை துரத்திபிடித்து மடக்கினர். அதன்பின் அவர்கள் தெரிவிக்கையில்,

சொகுசு வாழ்க்கைக்காக ஆசைப்பட்டு செல்போன் கடையில் திருடியதை ஒத்துக்கொண்டனர். வேடசந்தூரை சேர்ந்த குமார், சூர்யா மற்றும் பார்த்திபன் என தெரியவந்தது. தாங்கள் திருடிய செல்போன்களை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து மது அருந்தி சந்தோசமாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News