உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தரிசு நிலத்தில் வேம்பு வளர்க்க மானியம்

Published On 2022-05-26 10:26 GMT   |   Update On 2022-05-26 10:26 GMT
தரிசு நிலங்களில், எண்ணெய் வளம் மிகுந்த வேம்பு வளர்க்கவும், உணவு பாதுகாப்பு திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. விவசாயி ஒருவரின் வேம்பு மரக்கன்றுகளை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
திருப்பூர்:

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் பயறுவகை தானியம், ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானியம், எண்ணெய் வித்துக்கள், மர எண்ணெய் வித்து பயிர்கள், எண்ணெய் பனை திட்டம் செயல்படுத்தப்படுகின்றன.தரிசு நிலங்களில், எண்ணெய் வளம் மிகுந்த வேம்பு வளர்க்கவும், உணவு பாதுகாப்பு திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில், 2.47 ஏக்கர் பரப்பில் வேம்பு நடவு செய்ய, 17 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.மேலும், கூடுதலாக நடவு செய்த முதல் மூன்று ஆண்டுகளுக்கு, ஊடு பயிரிடுதல் மற்றும் பராமரிப்பு மானியமாக 3,000 ரூபாயும் வழங்கப்படுகிறது.

மானியத்தில் நடவு செய்து பயனடைந்த, குளத்துப்பாளையம் விவசாயி ஒருவரின் வேம்பு மரக்கன்றுகளை  வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தரிசு நிலத்திலும், வருவாய் பெற, தேசிய உணவு பாதுகாப்பு திட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News