உள்ளூர் செய்திகள்
இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல பாதை வசதி இல்லை.

மயானத்திற்கு செல்ல சாலை வசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-05-19 09:23 GMT   |   Update On 2022-05-19 09:23 GMT
மயானத்திற்கு செல்ல சாலை வசதி வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பூதலூர்:

பூதலூர்ஊராட்சி ஒன்றியம் கோவில்பத்து ஊராட்சி கெங்கைசமுத்திரம் குடியிருப்பு பகுதியில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு தெருவைச் சேர்ந்தவ ர்களுக்கான மயான இடம் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள வயல்களுக்கு நடுவில் அமைந்துள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு தெருவில் உள்ள குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களது உடலை வயல்களின் வழியாக எடுத்து சென்றுஅடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இரண்டு சிறுவாய்க்கா ல்களை கடந்து சேற்றில் வயல்களில் நெல் நடவு செய்யப்பட்டிருந்தாலும் அதன் ஊடே சிரமப்பட்டு உடலை சுமந்து சென்று அடக்கம் செய்துவருவதாக கூறுகின்றனர். வயல்களுக்கு நடுவில் உள்ள மயானம் திறந்த வெளியாக உள்ளது.

 ஒரு கைபம்பு மட்டும் உள்ளது. அதுவும் செயல்படவில்லை. இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்து செல்ல பாதை வசதிகோரி மனுக்கள்கொடு த்தும் இதுவரை பயன்ஏதும் இல்லை என்று தெரிவிக்கி ன்றனர்.

இது குறித்து கெங்கைச முத்திரம் தி.மு.க. முன்னாள் செயலாளர் அன்புகூறும் போது, மயான இடத்திற்கு செல்ல பாதை அமைத்து தாருங்கள் என்று கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை.

 எனவே இனியும் காலம் தாழ்த்தாது மயானத்திற்கு செல்ல சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News