உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சாலையில் கிடந்த பணத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த வாலிபர்கள்

Published On 2022-05-10 07:46 GMT   |   Update On 2022-05-10 07:46 GMT
சாலையில் பணத்தை தவற விட்டு சென்றவர்கள் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூரை சேவூரை சேர்ந்தவர் சரண்ராஜ்(வயது 25). இவரது  தம்பி முரளிதரன்(23), உறவினர் உதயகுமார்(23). இவர்கள் வளம் ரோட்டில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க வந்தனர். இரவு படம் முடிந்து வெளியே வந்த அவர்கள் மின் மயானம் ரோட்டில் நடந்து சென்ற போது, ரோட்டில் 32 ஆயிரம் ரூபாயை கண்டெடுத்தனர்.

உடனே பணத்தை எடுத்து கொண்டு திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தனசேகரனிடம் பணத்தை ஒப்படைத்தனர். வாலிபர்களின் நேர்மையை அனைவரும் பாராட்டினர். சாலையில் பணத்தை தவறவிட்டு சென்றவர்கள் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News