உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

பாவூர்சத்திரத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 74 இரு சக்கர வாகனங்கள் 13-ந் தேதி ஏலம்

Published On 2022-05-08 09:24 GMT   |   Update On 2022-05-08 09:24 GMT
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 74 இருசக்கர வாகனங்கள் பாவூசத்திரத்தில் வருகிற 13-ந் தேதி ஏலம்விடப்படுகிறது.
வீ. கே. புதூர்:


தென்காசி மாவட்ட மதுவிலக்கு  குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசு விதிமுறைகளின் படி பறிமுதல் செய்த இருசக்கர வாகனங்களின்  வழக்கு நிலுவையில் இருப்பதால்  அவற்றை அரசுடமையாக்கப்பட்டு ஏலம் விடுவது வழக்கம்.

தற்போது அரசுடமையாக்கப்பட்ட 74 இருசக்கர வாகனங்களை ஏலம் விட காவல்துறை மற்றும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் பாவூர்சத்திரம் காவல் நிலையம் அருகில் உள்ள வெண்ணிமலை முருகன் கோவில் முன்பு உள்ள மைதானத்தில் வருகிற 13-ந் தேதி (வெள்ளிக்கிழமை ) காலை 10 மணிக்கு பொது ஏலம்  விடப்படுகிறது. 

பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வர்கள் 13-ந் தேதி காலை 9  மணியளவில் ரூ.2 ஆயிரம் செலுத்தி காப்பு தொகை செலுத்தியதற்கான ரசீதை பெற்று கொள்ளவும்.

 காப்பு தொகை செலுத்தியவர்கள் வாகனத்தின் ஏலம் எடுக்கவில்லை எனில் தொகை செலுத்தியதற்கான காப்பு தொகை திருப்பி ஒப்படைக்கப்படும். 

ஏலம் விடப்படும் 74 வாகனங்கள் பாவூர்சத்திரம் காவல் நிலையம் முன்பு உள்ள வெண்ணி மலை முருகன் கோவில் முன்புள்ள மைதானத்தில் நிறுத்தப்பட்டு  உள்ளது  எனவும்  ஏலதாரர்கள் வாகனங்களை பார்வையிட்டு வாகன ஏலத்தில் கலந்து கொள்ளவும்  அறிவுறுத்தப்படுகிறது. 

ஏலத்தில் எடுக்கப்படும் வாகனத்திற்கான ஏலத்தொகை அரசு நிர்ணயம் செய்துள்ள தொகை, வரியுடன் சேர்த்து ரொக்கமாக அன்றைய தினமே செலுத்த வேண்டும்.  ஏலம் எடுக்கப்பட்ட வாகனங்களுக்கான தொகையை செலுத்திய உடன் ஏலதாரர்கள் வசம் ஒப்படைக்கப்படும். 

மேலும் ஏலம் எடுக்க வரும் ஏலதாரர்கள் கொரோனா தடுப்பூசி 2 தவணைகள் செலுத்தியிருக்க வேண்டும்.  என   தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
Tags:    

Similar News