search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pavoorchattram"

    • பாவூர்சத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.
    • மணிமுத்தாறு பட்டாலியனில் பயிற்சி ஆசிரியராகவும் இருந்தார்.

    நெல்லை:

    கடையம் அருகே உள்ள வடமலைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயசங்கர் ( வயது 57).

    இவர் வி.கே.புரம் போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். மேலும் மணிமுத்தாறு பட்டாலியனில் பயிற்சி ஆசிரியராகவும் இருந்தார்.

    இவர் தற்போது பாவூர்சத்திரத்தில் வசித்து வந்தார். நேற்று மாலை பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பாவூர் சத்திரம் மார்க்கெட் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.

    நெஞ்சுவலி காரணமாக ஜெயசங்கர் இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    பாவூர்சத்திரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை, திருட்டில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    வீ.கே.புதூர்:

    பாவூர்சத்திரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த விஸ்வநாததாஸ் நகரைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் மாரியப்பன் (வயது 20), மேலப்பாவூரை சேர்ந்த சரவணன்(20), பாவூர்சத்திரம் பகுதியிலுள்ள வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குறும்பலாப்பேரியைச் சேர்ந்த சேர்மதுரை (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ்  அறிவுறுத்தியதன் பேரில், மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் உத்தரவிட்டார். 

    இதைத்தொடர்ந்து 3 பேரையும் பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை மத்திய சிறையில்  அடைத்தார்.
    ×