என் மலர்
நீங்கள் தேடியது "goondas"
- பொற்கொடி, ராஜேஷ், செந்தில்குமார், கோபி ஆகியோர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.
- சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 10 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மேலும் 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஹரிஹரன், மலர்க்கொடி, சதீஷ்குமார், கோ.ஹரிஹரன், அஞ்சலை, சிவா, பிரதீப், முகிலன், விஜயகுமார், விக்னேஷ், அஸ்வத்தாமன், பொற்கொடி, ராஜேஷ், செந்தில்குமார், கோபி ஆகியோர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாவூர்சத்திரம் பகுதிகளில் கஞ்சா விற்பனை, திருட்டில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
வீ.கே.புதூர்:
பாவூர்சத்திரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த விஸ்வநாததாஸ் நகரைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகன் மாரியப்பன் (வயது 20), மேலப்பாவூரை சேர்ந்த சரவணன்(20), பாவூர்சத்திரம் பகுதியிலுள்ள வீடுகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த குறும்பலாப்பேரியைச் சேர்ந்த சேர்மதுரை (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் அறிவுறுத்தியதன் பேரில், மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து 3 பேரையும் பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தார்.






