உள்ளூர் செய்திகள்
தீயணைப்பு துறை சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நடந்தபோது எடுத்த படம்.

ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

Update: 2022-05-06 10:02 GMT
ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
ஆத்தூர்:

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் சிகிச்சைப் பிரிவில் கடந்த மாதம் தீ விபத்து ஏற்பட்டது.  

இதையடுத்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தீ தடுப்பு உபகரணங்களை தயாராக வைத்திருக்கவும், தீ விபத்து நிகழாவண்ணம் முன் எச்சரிக்கையுடன் இருக்கவும், பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு அறிவுறுத்தியது.

அதன்படி அரசு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் ஆத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீ தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

மருத்துவர்கள் செவிலியர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு தீ தடுப்பு முறை குறித்தும், அவற்றைக் கையாளும் முறை குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. விபத்து நடக்கும் போது பொதுமக்களை காப்பாற்றும் முறை குறித்தும், தீ அணைப்பது குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர். 

தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். நிகழ்வில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News