உள்ளூர் செய்திகள்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி போடப்பட்டது.

கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

Published On 2022-04-30 11:12 GMT   |   Update On 2022-04-30 11:12 GMT
மதுரையில் இன்று 1500 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
மதுரை

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் கடந்த ஜனவரி மாதம் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் தமிழக அளவில் கொரோனா படிப்படியாக குறைய தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்பட்டன. ‘பொது மக்கள் அவசியம் இருப்பின் முக கவசம் அணியலாம்’ என்று தமிழக அரசு அறி வித்தது.

இந்த நிலையில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் த ற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே தமிழகம் முழு வதும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மீண்டும் ஆரம்பித்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழு வதும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மீண்டும் தொட ங்கப்பட்டு உள்ளன.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்ட சுகா தாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார் நிருபர்களிடம் பேசுகையில், “மதுரை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 900 மையங்களிலும், நகரப்பகுதி களில் 600 மையங்களிலும் ஆக மொத்தம் 1500 மையங்களில் 28-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. இங்கு பொதுமக்கள் கியூ வரிசை யில் நின்று தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் 86 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பு ஊசி போடப்பட்டு உள்ளது. 2-ம் டோஸ் ஆக 60.5 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மதுரையில் இன்று குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவது என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்” என்று தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை கண்காணிக்கும் வகையில் சிறப்பு கண்காணிப்பு குழு ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

மதுரை மாவட்டத்தில் முதல் தவணை, 2-வது தவணை மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி ஆகியவற்றை செலுத்துவது தொடர்பாக அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் உடன் ஒருங்கிணைந்து பள்ளி. கல்லூரி என்.எஸ்.எஸ்., என்.சி.சி மாணவர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் “பொதுமக்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், கூட்டமான இடங்களில் சமூக இடைவெளி கடை பிடித்தல், முககவசம் அணிதல் மற்றும் பொது இடங்களுக்கு சென்று வீடு திரும்பிய பின் முறையாக கைகழுவுதல் ஆகிய நடை முறைகளை பின்பற்ற வேண்டும்” என்று மாவட்ட கலெக்டர் அனீஷசேகர் வேண்டுகோள் விடுத்து உள்ளார். 

Tags:    

Similar News