உள்ளூர் செய்திகள்
மலை பாதையில் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டபோது எடுத்த படம்.

பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றம்- எஸ்.பி., டி.எஸ்.பி. பங்கேற்பு

Published On 2022-04-30 08:31 GMT   |   Update On 2022-04-30 08:31 GMT
ஏற்காடு மலைப்பாதையில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றம் பணியில் எஸ்.பி., டி.எஸ்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஏற்காடு:

சேலம் மாவட்ட காவல் துறையினர் மற்றும் இயற்கை குழு இணைந்து ஏற்காடு மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ் தலைமையில்  டி.எஸ்.பி. தையல் நாயகி முன்னிலையில் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பொருட்களை அகற்றினர்.  

ஏற்காடு மலையின் இயற்கை வளத்தை பாதுகாக்க ஒத்துழைப்பு தருமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  அப்போது  ஏற்காடு அடிவாரம் சோதனைச் சாவடி பகுதியில் இருந்து தொடங்கி பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் இயற்கை பேரழிவு பற்றி எடுத்துக்கூறி துண்டு பிரசுரங்கள் வழங்கி ஏற்காடு மலைப்பாதையில் சாலையோரங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை மேற்க்கொண்டனர்.

நிகழ்ச்சி துவக்கத்தில் மனிதனை அளிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவேண்டாம். மலை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை வீசி செல்வதால் வனம் அழிவதுடன் வனவிலங்கு களும் பாதிக்கபடுகிறது. 

எனவே பிளாஸ்டிக் பொருட்களை மலை பகுதியில் ஆங்காங்கே வீசி செல்லாமல் குப்பை தொட்டியில் போடவும். வளத்தையும் மனிதனையும் காப்பாற்ற நாம் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பாளர் அபினவ் கேட்டுகொண்டார்.

Tags:    

Similar News