உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வெள்ளகோவிலில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்

Update: 2022-04-15 07:49 GMT
பெருந்துறையில் 24 ந்தேதி கீழ்பவானி பாசன வாய்க்காலில் சிமெண்ட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள நடுப்பாளையத்தில் விவசாயி செல்லமுத்து தலைமையில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் இந்த மாதம் பெருந்துறையில் 24 ந்தேதி கீழ்பவானி பாசன வாய்க்காலில் சிமெண்ட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது, அந்த மாநாட்டிற்கு ஆதரவு கோரி நடுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் கலந்துகொண்டு நடைபெற இருக்கும் கவன ஈர்ப்பு கோரிக்கை மாநாட்டில் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் கீழ்பவானி பாசன விவசாயிகள் நல சங்க தலைவர்  நல்லசாமி, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வெங்கடாசலம், செயலாளர் செங்கோட்டையன், கீழ்பவானி பாசன பாதுகாப்பு அமைப்பாளர் எம்.ரவி, இயற்கை வாழ்வுரிமை அமைப்பாளர் பொடாரன் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News