உள்ளூர் செய்திகள்
மெகா கொரோனா தடுப்பு முகாமில் பெண் ஒருவருக்கு செவிலியர் தடுப்பூசி போட்ட போது எடுத்த படம்.

மெகா கொரோனோ தடுப்பூசி முகாம்

Published On 2022-04-03 08:23 GMT   |   Update On 2022-04-03 08:23 GMT
பரமத்திவேலூர் பகுதிகளில் மெகா கொரோனோ தடுப்பூசி முகாம்
பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பரமத்திவேலூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், ஜேடர்பாளையம், சோலசிராமணி, மணியனூர், கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி, மற்றும் தனியார் பள்ளிகளிலும், அரசு அலுவலகங்கள், அரசு சுகாதார மையங்களில் நேற்று கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடைபெற்றது. 

இதில் கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர், பரமத்தி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் தலைமையில் சுகாதார மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்துகொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டனர். 

அதேபோல் கொரோனா தடுப்பு ஊசி போடுவது 100 சதவீத இலக்கை எட்டுவதற்காக சுகாதாரத்துறை மருத்துவர்கள் தலைமையில் சுகாதார செவிலியர்கள் கொண்ட குழுவினர் கிராமப்பகுதிகளில் வீடு, வீடாக சென்று வீடுகளில் உள்ள முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முகாமிற்கு வராதவர்களுக்கு தடுப்பூசி போட்டனர். 

இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
Tags:    

Similar News