உள்ளூர் செய்திகள்
தீமிதி திருவிழா நடந்தது.

முள்ளாச்சி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

Published On 2022-03-21 10:08 GMT   |   Update On 2022-03-21 10:08 GMT
திருத்துறைப்பூண்டி முள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி முள்ளாச்சி மாரியம்மன் கோவில் 78&ம் ஆண்டு திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழாவை முன்னிட்டு காலை முதல் காவடி எடுத்தல், மாவிளக்கு போடுதல், முடி காணிக்கை செலுத்துதல் அபிஷேகம் ஆராதனை இதர பிரார்தனைகள் செலுத்துதல் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு காவடிகளுடன் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜா, கணக்கர் சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். நாளை (செவ்வாய்கிழமை) தேளிகுளம்பிள்ளையார் கோவில்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
Tags:    

Similar News