உள்ளூர் செய்திகள்
பூஸ்டர் தடுப்பூசி

தமிழகத்தில் இரண்டு தவணை முடித்த 5,431 முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது

Published On 2022-03-18 06:39 GMT   |   Update On 2022-03-18 06:39 GMT
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மருத்துவ குழுவினர் நேரில் சென்று 12 வயது நிரம்பிய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.
சென்னை:

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி பல்வேறு கட்டங்களாக தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மெகா முகாம்கள் மூலம் தடுப்பூசி போடுவது ஒரு இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது.

இதுவரையில் 9 கோடியே 91 லட்சத்து 7 ஆயிரத்து 546 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. 45 வயது முதல் 60 வயது வரையுள்ள பிரிவினர் 2 கோடியே 80 லட்சத்து 75 ஆயிரத்து 819 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு கோடியே 29 லட்சத்து 75 ஆயிரத்து 375 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 18 முதல் 44 வயது பிரிவினர் தான் அதிகளவு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 5 கோடியே 71 லட்சத்து 1,479 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 16 முதல் 18 வயதுடைய பிரிவில் 47 லட்சத்து 36 ஆயிரத்து 590 தடுப்பூசி இதுவரையில் செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் முதல் 12 முதல் 14 வயது வரையுள்ள பிரிவினர் மற்றும் 60 வயது நிரம்பிய முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தொடங்கியது.

பள்ளி சிறுவர்களுக்கு போடப்படும் இந்த தடுப்பூசி கோர்பேவேக்ஸ் என்னும் புதிய தயாரிப்பாகும். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் மருத்துவ குழுவினர் நேரில் சென்று 12 வயது நிரம்பிய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.

முதல் நாளில் 49,760 மாணவர்களுக்கும் நேற்று 1 லட்சத்து 49 ஆயிரத்து 359 பேருக்கு போடப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் சிறுவர்களுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2 நாளில் 5,431 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. முதல் நாளில் 2,123 பேருக்கும், நேற்று 3,308 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News