உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் மதுக்கடை

வேளாண் நிலங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Published On 2022-02-26 12:46 GMT   |   Update On 2022-02-26 12:46 GMT
வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு தடை விதிக்க கோரி அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகர் பகுதி விளை நிலம் என்பதால் அங்கு டாஸ்மாக் கடை திறக்கப் போவதில்லை என்றும் சட்ட விதிகளின்படியே உரிய இடத்தில் அமைக்க அனுமதிக்கப்படும் என்றும் விளக்கமளித்தார்.

பின், இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகளை அமைக்க அனுமதிக்கக்கூடாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படியுங்கள்.. ரஷ்ய படைகள் நுழைவதை தடுக்க தன்னைத்தானே வெடிக்கச் செய்த உக்ரைன் ராணுவ வீரர்
Tags:    

Similar News