உள்ளூர் செய்திகள்
ஊராட்சி மன்ற கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

உடன்குடியில் புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு

Published On 2022-01-26 09:53 GMT   |   Update On 2022-01-26 09:53 GMT
உடன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாதவன்குறிச்சியில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டபட்ட மாதவன்குறிச்சி ஊராட்சி மன்ற கட்டிடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
உடன்குடி:

உடன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாதவன்குறிச்சியில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் மாதவன்குறிச்சி ஊராட்சி மன்ற கட்டிடம் புதிதாக கட்டபட்டது.

இதற்கான திறப்பு விழாவிற்கு உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங் தலைமை  தாங்கினார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார்.

பின்பு அமைச்சர் பேசியதாவது:-

தி.மு.க.அரசின் திட்டங்கள் கிராமப்புற மக்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும், கிராமங்களில் தெருவிளக்கு, குடிநீர் பிரச்சனை, சாலை வசதி போன்றவற்றை உடனடியாக தீர்வு செய்யவேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அத்தியாவசிய தேவையான குடிநீர். சாலைபணி, தெருவிளக்கு, முக்கியத்துவம் கொடுத்து உடனுக்குடன் மக்கள் பணிசெய்யப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்கள் பணி செய்யும் ஸ்டாலின் நமக்கு தமிழக முதல்வராக கிடைத்து இருப்பது நமக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

அப்படிப்பட்ட முதல் வருக்கு நாம் அனைவரும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும். தேர்தலுக்கு முன்புசொன்ன திட்டங்களையும், சொல்லாத திட்டங்களையும் தொடர்ந்து முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

 இவ்வாறு அவர் பேசினார்.  

Tags:    

Similar News