உள்ளூர் செய்திகள்
அன்னதானம் வழங்கப்பட்டபோது எடுத்த படம்.

திருச்செந்தூரில் பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்

Update: 2022-01-25 10:27 GMT
திருச்செந்தூருக்கு வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஆனந்த விநாயகர் கோவில் அருகில் வைத்து இந்து மக்கள் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை பொங்கல் திருவிழா மற்றும் தைப்பூசம் ஆகிய நாட்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

தற்போது ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரத்தொடங்கியுள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் திருச்செந்தூர் ஆனந்த விநாயகர் கோவில் அருகிலும், கடற்கரை பகுதியிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ரவிகிருஷ்ணன் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். 

நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் இசக்கிமுத்து, அனுமன் சேனா தங்கராஜ், தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல், ஒன்றிய துணைத் தலைவர் ராஜேஷ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News