உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 23 பேர் மீது வழக்கு

Published On 2022-01-24 09:38 GMT   |   Update On 2022-01-24 09:38 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறிய சாலைகளில் சுற்றித்திரிந்ததாக 23 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி:

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க இரவு நேரங்களை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. நேற்று 3-வது வாரமாக முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின்பேரில் போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது முழுஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக 23 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் பொதுஇடங்களில் முககவசம் அணியாமல் சென்றதாக தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி, கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 421 பேரிடம் தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.84,200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதேபோல் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Tags:    

Similar News