தமிழ்நாடு

கோடை வெப்பம் அதிகரித்ததால் எலுமிச்சை விலை கடும் உயர்வு

Published On 2024-05-08 04:10 GMT   |   Update On 2024-05-08 04:10 GMT
  • சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் கூடூர், ராஜம்பேட்டை, கலிகிரி ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 8 லாரிகளில் சுமார் 80 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
  • மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரகத்தை பொறுத்து ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது.

போரூர்:

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பத்தின் அளவு 104 டிகிரி வரை பதிவாகி வருகிறது.

பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதால் அலுவலகம் உள்ளிட்ட வேலை நிமித்தமாக வெளியே செல்பவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஆங்காங்கே சாலையோரம் தர்பூசணி, கிர்ணி, இளநீர், கரும்புச்சாறு, பழச்சாறு ஆகியவற்றை வாங்கி குடித்து தாகத்தை தணித்து வருகின்றனர்.

நீர்ச்சத்து அதிகம் மற்றும் உடல் சூட்டை தணிக்கும் பழங்களில் முதன்மையானது எலுமிச்சை பழம். கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக எலுமிச்சை பழம் தேவை வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது.

நாள்தோறும் இல்லத்தரசிகள் காய்கறிகளுடன் எலுமிச்சை பழங்களை அதிகளவில் வாங்கி செல்வதை காணமுடிகிறது. இதனால் எலுமிச்சை பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலம் கூடூர், ராஜம்பேட்டை, கலிகிரி ஆகிய பகுதிகளில் இருந்து தினசரி 8 லாரிகளில் சுமார் 80 டன் எலுமிச்சை பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரகத்தை பொறுத்து ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்படுகிறது. அதே நேரத்தில் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் எலுமிச்சை பழம் ஒரு கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News