திமுக நிர்வாகியை தாக்கிய சீமான் - விருத்தாசலத்தில் பரபரப்பு!
- கடலூர் கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகியாக இருப்பவர் ரங்கன்
- விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் திமுக நிர்வாகி ரங்கன் என்பவரை சீமான் தாக்கியதால் பெரும் பரபரப்பு நிலவியது. சீமானுடன் சேர்ந்து நாம் தமிழர் கட்சியினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கம் சார்பில், 20 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு மாநில மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சீமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மாநாடு முடிந்து காரில் ஏறி சீமான் வெளியே சென்றபோது, வழியில் நின்று கொண்டிருந்த கடலூர் கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகி ரங்கன், காரை வழிமறுத்து சீமானை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் சீமானின் ஆதரவாளர்கள் திமுக நிர்வாகியை சராமாரியாக தாக்கியுள்ளனர். சீமானும் காரில் இருந்து இறங்கி ரங்கனை தாக்கியுள்ளார். தொடர்ந்து நாதகவினர், திமுக நிர்வாகியை கைது செய்யவேண்டும் எனக்கோரி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.