நந்தனம் கல்லூரியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை- உணவக ஊழியர் கைது
- உணவகத்தில் வேலை செய்த 22 வயது பெண்ணை கல்லூரி வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- பாலியல் வன்கொடுமை செய்த மற்ற நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை:
சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் ஆண், பெண் இருபாலரும் படித்து வருகிறார்கள்.
இந்த கலை கல்லூரியில் உள்ள உணவகத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த குணசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அதே உணவகத்தில் வேலை செய்த 22 வயது பெண்ணை கல்லூரி வளாகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் 5 பேரும் 22 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் அழுதுகொண்டே கல்லூரியில் உள்ள காவலாளியிடம் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக சைதாப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து குணசேகரன் கைது செய்யப்பட்டார். பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மற்ற நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கொலை செய்த சம்பவம் அடங்கும் முன்னரே நந்தனம் கலைக்கல்லூரியில் 22 வயது பெண் ஒருவரை 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.