தமிழ்நாடு செய்திகள்

காமேனி கொல்லப்பட்டதை உலக நாடுகள் கண்டிக்குமாறு இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் அழைப்பு

Published On 2026-03-01 16:03 IST   |   Update On 2026-03-01 16:03:00 IST
  • யதுல்லா அலி காமேனி (86 வயது) மறைவுக்கு ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கடுகிறது.
  • அனைத்து நாடுகளும் இந்தக் கொடூரக் குற்றத்தைக் கண்டிக்க வேண்டும்.

ஈரான் மீது நேற்று அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அதன் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.

தெஹ்ரானில் நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த நிலையில், ஈரான் அரசு ஊடகமாக IRNA அவரது மரணத்தை உறுதி செய்தது.

கடந்த 35 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்தி வந்த அயதுல்லா அலி காமேனி (86 வயது) இயற்கை எய்தியதாக IRNA அறிவித்துள்ளது. அவரது மறைவுக்கு ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கடுகிறது.

இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலில் காமேனியுடன் அவரது மகள், பேரன், மருமகன், மருமகள் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து உலக நாடுகள் மௌனம் காக்காமல் கண்டிக்குமாறு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகெங்கிலும் உள்ள சுதந்திரத்தை விரும்பும் அனைத்து நாடுகளும் இந்தக் கொடூரக் குற்றத்தைக் கண்டிக்க வேண்டும். சட்டவிரோதம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு முன்னால் அமைதியாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

பெருமைமிக்க ஈரான் நாடு, எப்போதும் போல, வலிமை, மற்றும் உறுதியுடன் அதன் உன்னதமான பாதையைத் தொடரும். நாட்டின் தற்போதைய விவகாரங்களில் எந்த இடையூறும் அனுமதிக்கப்படாது. தியாகிகளின் தியாகம், ஈரானிய மக்களின் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உயர்ந்த இலட்சியங்களைப் பாதுகாப்பதில் அவர்களின் உறுதியை வலுப்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News