தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தி

Published On 2026-03-01 14:00 IST   |   Update On 2026-03-01 14:00:00 IST
  • அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
  • மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சென்னை:

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, இன்று பிறந்தநாளும் காணும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியம், வலிமை மற்றும் நீண்ட ஆயுள் பெற்று தமிழக மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவை செய்ய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். 

Tags:    

Similar News