தமிழ்நாடு செய்திகள்

காலை பார்த்தால் தான் சரியான பாதையில் பயணிக்க முடியும் - முதலமைச்சரின் விமர்சனத்துக்கு இ.பி.எஸ். பதிலடி

Published On 2026-01-29 14:40 IST   |   Update On 2026-01-29 14:40:00 IST
  • அரசியலை அரசியல் ரீதியாக முதலமைச்சர் பேச வேண்டும்.
  • தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிக்காமல் அவதூறு பரப்புவதா?

சேலம் மாவட்டம் ஓமலூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. அதில் பங்கேற்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:

* மக்கள் பிரச்சனைகளை சட்டசபையில் எழுப்பினால் அதற்கு சரியான பதில் இல்லை.

* காலை பார்த்தால் தான் சரியான பாதையில் பயணிக்க முடியும்.

* அரசியலை அரசியல் ரீதியாக முதலமைச்சர் பேச வேண்டும்.

* தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது.

* தி.மு.க. ஆட்சியில் விலைவாசி பன்மடங்கு அதிகரித்துள்ளது. கடனாளி என்ற பட்டம் தான் மக்களுக்கு கிடைத்துள்ளது.

* தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால் அதற்கு பதில் அளிக்காமல் அவதூறு பரப்புவதா?

இவ்வாறு அவர் கூறினார்.

மேலே பார்க்காமல் கால்களை மட்டுமே பார்த்தால் சூரியன் எப்படித் தெரியும்? என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News